வெள்ளி, 6 டிசம்பர், 2024

தூத்துக்குடியில் வாட்ஸ்அப் மூலம் ஷேர் மார்க்கெட் ட்ரேடிங் மோசடி: ரூ.52.11 லட்சம் கையாடல் செய்த நபர் கைது

Tamil Nadu updates

தூத்துக்குடி லீக்ஸ் 06.12.2024


வாட்ஸ்அப் மூலம் ஷேர் மார்க்கெட் ட்ரேடிங் மோசடி: ரூ.52.11 லட்சம் கையாடல் செய்த நபர் கைது செய்யப்பட்டார்.


இது பற்றிய செய்தியாவது 

கேரளாவில் குற்றவாளி !!!

தூத்துக்குடி மாவட்டத்தில் வாட்ஸ்அப் மூலமாக பணம் சம்பாதிக்கலாம் என கூறி ரூ.52,11,000/- மோசடி செய்த குற்றவாளி கேரளாவில் இருந்து கைது செய்யப்பட்டார்.


வாட்ஸ் அப் செய்தி!!!

பணம் சம்பாதிக்கலாம் ?

தூத்துக்குடி கேடிசி நகரைச் சேர்ந்த ஒருவருக்கு வாட்ஸ்அப் மூலம் ஷேர் மார்க்கெட் ட்ரேடிங் வாயிலாக பணம் சம்பாதிக்கலாம் என ஒரு செய்தி வந்தது. 

பேராசை!!!

அந்த செய்தியில் கூறப்பட்டதை நம்பி, முதலில் ரூ.4.40 லட்சம் முதலீடு செய்து லாபம் பெற்றார். 

ஏமாந்தார்!!!

இதனை தொடர்ந்து இன்னும் அதிக லாபம் கிடைக்கும் என கூறி மர்ம நபர்கள் www.irqql.com என்ற இணையதளத்தை பரிந்துரைத்து, அதில் குறிப்பிட்ட செயலியை பதிவிறக்க செய்து, முழுமையாக ரூ.52.11 லட்சம் முதலீடு செய்துள்ளார். 

புகார்!!!

பின்னர் அவர் மோசடி செய்யப்பட்டதென உணர்ந்து NCRP (தேசிய சைபர் குற்ற பக்கம்) மூலம் புகார் செய்தார்.


குற்றவியல் நடவடிக்கை:


புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப  உத்தரவின்படி, சைபர் குற்ற பிரிவு காவல்துறை ஆய்வாளர் சாந்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை!!!

 தொழில்நுட்ப விசாரணையின் மூலம் கேரள மாநிலம் மலப்புரம் இடவான பகுதியைச் சேர்ந்த அஜ்மல் (45) என்பவர் குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.


தனிப்படை அதிகாரிகள் கேரளா சென்று 05.12.2024 அன்று அஜ்மலை கைது செய்தனர். 


தொடர்ந்து, அவர் தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.


பொது மக்களுக்கு எச்சரிக்கை:

பகுதி நேர வேலை, ஷேர் மார்க்கெட் ட்ரேடிங் அல்லது ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறும் போலி தகவல்களை நம்ப வேண்டாம். தேவையற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்யவும், சந்தேகத்திற்கு இடமான இணையதளங்களை அணுகவும் தவிர்க்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேட்டுக்கொண்டார்.


 விழிப்புடன் இருங்கள்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக