ஞாயிறு, 22 டிசம்பர், 2024

தூத்துக்குடி சண்முகபுரம் பேதுரு ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா விமரிசையாக நடைபெற்றது

Tamil Nadu updates

Photo news by sunmugasuthram Reporter 

தூத்துக்குடி சண்முகபுரம்  பேதுரு ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா விமரிசையாக நடைபெற்றது



தூத்துக்குடி, திசம்பர் 23: 

தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்குட்பட்ட சண்முகபுரம் பைது பேதுரு ஆலயத்தில் 2024 கிறிஸ்துமஸ் மெகா கொண்டாட்டம்  

பங்கு மக்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.

2025 ம் ஆண்டில் வளமான வாழ்க்கை அமையட்டும் 

 

விழாவில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை, பாலகன் பிறப்பு குறித்த பாடல்கள், வாழ்த்துரை மற்றும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. இதைத் தொடந்து குரு இம்மானுவேல் வான்ஸ்றக் ஜெபம் செய்து, “கிறிஸ்து தம்முடைய பிறப்பினால் அனைவரின் பாவங்களை நீக்கி வாழ்வில் சிறந்த மாற்றங்களை தருகிறார். வரும் 2025ம் ஆண்டில் ஒவ்வொருவருக்கும் முன்னேற்றம் மற்றும் வளமான வாழ்க்கை அமையட்டும்” என்று உரையாற்றினார்.


நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது. 


விழாவில் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன், ஆலய செயலாளர் ஜவஹர் சுந்தர், பொருளாளர் ஞான்ராஜ், நாசரேத் திருமண்டல செயலாளர் நீகா பிரின்ஸ் கிப்சன், ., திருமண்டல உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளின் மேலாளர் பிரேம்குமாா், ராஜாசிங், சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜெயரட்சகர், பாிதுபேதுரு ஆலய உதவி குருவானவா் ஜெபஸ்டின்தங்கபாண்டி, சபை ஊழியா்கள் சாம், பாஸ்கா், கமிட்டி உறுப்பினர்கள் பிரபாகரன், ஜெபராஜ், ராபின்சன், மோகன்குமாா், டேவிட், மற்றும் தென்றல், ஜெபக்குமாா், ரவி, உள்பட  திரளாக பங்கேற்றனர்.


இந்த விழா பக்தர்களிடையே மகிழ்ச்சியும் அமைதியும் அளித்த சிறப்பான நிகழ்வாக அமைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக