ஞாயிறு, 1 செப்டம்பர், 2024

கார் ரேஸ் பாஜக காட்டம் இதுதான் திராவிட மாடல் ஃபார்முலா வா!!! அறிவிக்கப்படாத துணை முதலமைச்சராக உதயநிதி!!!!

 

மக்களின் உணர்வுகளின் மேல் ஏறி விளையாடும் கார் ரேஸ்,

இதுதான் திராவிட ஃபார்முலாவா?



 தமிழகத்தின் முக்கிய மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் கண் முன்னே விஸ்வரூபமெடுத்து நின்று கொண்டிருக்கிறது.


 எங்கும் போராட்டம்!!!

தமிழகம் முழுதும் போராட்டக் களமாக மாறிக் கொண்டிருக்கிறது

டாக்டர்கள் முதல் ஆக்டர்கள் வரை 

அனைத்து துறையை சேர்ந்த ஊழியர்களும் தேர்தல் வாக்குறுதிகளில் கூறியபடி செயல்படாமல் ஏமாற்றும் திமுக அரசியல் எதிர்த்து தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.


தற்போது பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உட்பட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 10ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று ஆசிரியர்  கூட்டமைப்பு அறிவித்துள்ளது.


சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்றும் தூய்மைப் பணி உள்ளிட்டு பல்வேறு துறைகளில் அறிவித்துள்ள தனியார்மயமாக்கல், வரி உயர்வு, மாநகராட்சி பள்ளிகள் மூடல் மற்றும் தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதார கோரிக்கைகளுக்காக பலரும் போராடி வருகிறார்கள். 


 நடைபாதை வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள்.


கூட்டணி கட்சி எதிர்ப்பு

ஆளும் திமுகவின் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்டு கட்சியே 

மக்கள் எதிர்ப்பை கண்டு அதிர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது


அரிசி கள்ளச் சந்தை பதுக்கல்!!

தமிழகம் முழுக்க ரேஷன் அரிசி ஒதுக்கப்பட்டு கள்ள சந்தையில் விற்கப்படுகிறது.


சென்னையில் எம்ஜிஆர் நகர், சத்யா நகர்,எஸ் எம் பிளாக் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் அரிசி பதுக்கி விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  அங்கே போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மழை வெள்ளம் பயத்தில் மக்கள்

கடந்த வருடம் சென்னை எதிர்கொண்ட பெருமழை வெள்ளத்தைப் போல் இந்த வருடமும் ஆகிவிடுமோ என்ற அச்சம் செப்டம்பர் துவக்கத்திலேயே  சென்னை மக்களை பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது.


மழை நீர் வடிகால் பணிகளை அத்தனை சதவிகிதம்,இத்தனை சதவிகிதம் நிறைவேற்றிவிட்டோம் என்று மாநகராட்சி மேயர் பிரியா அவ்வப்போது வாய்க்கு வந்தபடி செய்திகளை அறிவித்துக் கொண்டிருந்தாலும்... மழையில் சென்னை என்ன ஆனது என்பதை கடந்த ஆண்டே கண் முன் நிறுத்தியது. அதில் இருந்து பாடம்

கற்றுக்கொள்ளவில்லை என்பது, 

இன்னும் சென்னை முழுவதும் மழை நீர் வடிகால்களை சரி செய்யவில்லை என்பதே சான்று.


இத்தனை போராட்டங்களும், 

மக்கள் பிரச்சினைகளும் இந்த

சென்னையை பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது. 

இரண்டு 

மருத்துவமனை!!

 ஆனால் அறிவிக்கப்படாத பட்டத்து இளவரசர், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி அவர்களுக்கு சென்னையின் வீதிகளில், அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் பாதைகளில் , ஏழை மக்கள் பயன்பெறும் இரண்டு பெரும் அரசு மருத்துவமனைகள் அமைந்திருக்கும் பகுதியில் ஃபார்முலா ரேஸ் நடத்துவது ஒன்றே குறிக்கோள்!


திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டு வாக்களித்து ஏமாந்த மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில்,

திமுகவிற்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற மக்களின் நம்பிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் பாஜக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டவுடன் அத்தனை துறைகளும் போர்க்கால அடிப்படையில் ஃபார்முலா கார் பந்தயத்துக்கு ஆதரவாக வேகவேகமாக செயல்பட்டு, இரண்டு மணி நேரத்தில் மக்கள் பிரச்சினைகள் எல்லாம் தீர்த்து விடுகிறோம் என்று நீதிமன்றத்தில் பொய்யான ஏமாற்று  அபிடவிட் தாக்கல் செய்தனர். 


எதையுமே முறையாக சரியாக நீதிமன்றம் வழிகாட்டுதல்படி நடத்தப்படவில்லை.



*ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு காட்டும் வேகத்தை,  250 கோடி 

செலவிட்டு செலவிடப்பட்டுள்ளது என்று வருத்தப்பட்ட ஆந்திர மாநில தொழிலதிபருக்காக போர்க்கால அடிப்படையில், வாக்களித்த மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு சாவு மணி அடித்து 

வேலை செய்த திமுக அரசு நிர்வாகம், அதே வேகத்தில் தமிழக மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதிலும் இயங்கினால்  மிக நன்றாக இருக்கும்.


பல நூறு கோடிகளிள் புழங்கும் அரிதின் அரிதானோரின் நலத்தில் அக்கறை காட்டி சென்னை மாநகரின் வீதிகளில் ஃபார்முலா ரேஸ் நடத்துவதில் உள்ள வேகம் அரசுத் துறைகள் மக்கள் பிரச்சினைகளையும் இதே வேகத்தில் தீர்க்குமா அமைச்சர் உதயநிதி ?




  மக்களெல்லாம் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கையிலே ரேஸ் காரோட்டம் தேவையா??? இதுதான்  திராவிட ஃபார்முலாவா  என்று கேட்கும் காலம் திரும்பியிருக்கிறது.


இந்த ஃபார்முலா கார் ரேஸ் பந்தயத்தை  பெரும் பணக்காரர்கள் ஆயிரக்கணக்கானோர் தான் நேரில் பார்க்கிறார்கள்.  அமைச்சர் உதயநிதி என்ற தனி நபரின் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக,

உலகம் முழுவதும் உங்களை விளம்பரப் படுத்துகிறோம் என்று ஏமாற்றிய கயவர்களுக்காக, அரசு ஆடும் ஆட்டத்தை சென்னை மட்டுமல்ல தமிழ்நாட்டின் கோடிக்கணக்கான மக்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்

தமிழக மக்கள், தங்களின் நலனை கருத்தில் கொள்ளாத இந்த மக்கள் விரோத திமுக அரசுக்கு விரைவில்  விடையளிப்பார்கள்.

அறிவிக்கப்படாத துணை முதலமைச்சர்!!

துணை முதலமைச்சர் என்ற அறிவிப்பு இல்லாமல், அந்த இடத்தை நிரப்பிக் கொண்டிருக்கும் 

அமைச்சர் உதயநிதிக்கு கண்முன்னே இருக்கும் ஒரே பிரச்சினை ஃபார்முலா 4 கார் பந்தயத்தை  நடத்துவது தான்.


இனியாவது... விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி  அரசியல் துறையிலும் விளையாட்டு துறையிலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்படும் தகுதியான ஆலோசகர்கள் அதிகாரிகளை நியமித்து தமிழக விளையாட்டு துறையில், மறுமலர்ச்சி ஏற்படுத்தும் வகையில்,

பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவித்து, தேசிய போட்டிகளில் சாதனை படைத்து, உலகம் போற்றும் விளையாட்டு வீரர்களை தமிழகத்தில் இருந்து உருவாக்கும் வகையில் முழுமையாக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்.


ஏ.என்.எஸ்.பிரசாத்

தமிழக பாஜக செய்தி தொடர்பாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக