புதன், 14 ஆகஸ்ட், 2024

தூத்துக்குடி 2வது சிறந்த மாநகராட்சி விருது மேயர் ஜெகன் பெரியசாமி பேட்டி

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

14-8-2024 photo news 

by sunmugasunthram Reporter 

தமிழகத்தில் ..

சிறந்த 2வது மாநகராட்சியாக தூத்துக்குடி தேர்வு விருது அறிவிப்பு!!!

 தகவல் வந்ததும் மேயர் ஜெகன் பெரியசாமி அங்கு உள்ள அனைவரிடமும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் .



இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அனைத்து கட்டமைப்பு வசதிகளும் முறைப்படுத்தி நிறைவேற்றப்படுகிறது. 

விருது அறிவிப்பு மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு!!! 

இன்று 14-8-2024 நடைபெற்ற தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாமில் 

தற்போது...

தூத்துக்குடி மாநகராட்சி தமிழகத்தில் 

சிறந்த 2வது மாநகராட்சியாக விருது தேர்வு  செய்ய ப்பட்டுள்ளது.

 மேயர் ஜெகன் பெரியசாமி தனது மகிழ்ச்சியை அனைவருக்கும் தெரிவித்தார்.



      இது குறித்து..மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது;-

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் தூத்துக்குடி மாநகராட்சி கடந்த 2023-24ம் ஆண்டு சிறப்பான முறையில் பணியாற்றியதாகவும் சுகாதாரப் பணிகள், சாலை வசதிகள் சிறப்பாக செய்து கொடுக்கப்பட்டுள்ளது.



 இதனை பாராட்டும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி தமிழகத்தில் இரண்டாவது மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட உள்ளது. 

2024 ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவில் விருது

நாளை15-8-2024 சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதினை வழங்குகிறார்.


 இவ்விருதை மேயர் ஆகிய நானும், ஆணையரும் இணைந்து பெற்றுக் கொள்கிறோம். 


 தூத்துக்குடி மாநகராட்சியில் மண்டல வாரியாக இதுவரை 5 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.


 இதில் பெறப்பட்ட 627 மனுக்களுக்கு 510 மனுக்கள் தீர்வு காணப்பட்டது.


தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்ககொரோனா காலகட்டத்தில் பகுதி சபா கூட்டத்தின் மூலம் குறைகேட்பு நடைபெற்றது.


 ஆனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பல தொடர்புகளுக்கு மண்டல அலுவலகத்தை பயன்படுத்தி வருவதால் இங்கு குறைதீா்க்கும் முகாம் நடத்தப்பட்டு முதலில் 97, 137, 131, 157, 105, என மண்டலங்களில் மனுக்கள் பெறப்பட்டு மேற்கு மண்டலத்தில் இரண்டாம் கட்ட குறைதீா்க்கும் முகாம் நடைபெறுகிறது.


 இதில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும் முறையாக பதிவு செய்யப்பட்டு அதில் சில மாற்றங்களுக்கு உடனடியாக ஆணைகள் வழங்கப்பட்டு மீதி 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படுகிறது.

 அதில் குறிப்பாக சாலை கால்வாய் உள்ளிட்ட வசதிகள் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். 


அதில் கல்லூாி கோவில் ஆலயங்கள்மருத்துவமணைகள் என அந்த பகுதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பின்னர் அதை முறைப்படுத்தி செயல்படுத்துகிறோம்


 4 வீடுகள் உள்ள பகுதிகளிலும் ஒரு வீடு இருக்கிற பகுதியிலும் சாலை வசதி கேட்டு விண்ணப்பித்துள்ளனர் .


அதையும் முறைப்படுத்தி செய்து கொடுப்போம் 50 கோடியில் ஒரு திட்டம் செயல்படுத்துகிறோம் என்றால் அது அனைத்து பகுதிகளுக்கும் சென்றடையும் வகையில் பணிகள்நடைபெறுகின்றன. 

ஆனையருக்கு பாராட்டு!!!

இந்த குறைதீர்க்கும் முகாம் தொடர்ந்து மாநகராட்சி பகுதியில் நடைபெறும் 

பல ஐஏஎஸ் அதிகாாிகள் இருந்தாலும் நம்முடைய ஆணையர் மதுபாலன் 

இ ஆ.ப.எல்லா வகையிலும் துணையாக இருந்து நல்ல ஓத்துழைப்பு வழங்குவது மூலம் வளர்ச்சி பணிகள் நடைபெறுகின்றன.


 இன்று நடைபெற்ற 

 தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் 77 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனையில் உள்ளது என்று மேயர் ஜெகன் பொியசாமி தெரிவித்தார்.


இம்முகாமில்...

ஆனையர் மதுபாலன் 

மாநகராட்சி துணை ஆணையர் ராஜாராம், மாநகர பொறியாளர் சரவணன், உதவி ஆணையர் சுரேஷ்குமாா், நகர அமைப்பு திட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன், இளநிலை பொறியாளர்சேகா், குழாய் ஆய்வாளர் ராமமூர்த்தி, சுகாதார நகா்நல அலுவலர் டாக்டர் வினோத்ராஜா, சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின்பாக்கியநாதன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, கவுன்சிலர்கள் பொன்னப்பன், இசக்கிராஜா, சந்திரபோஸ், சரவணகுமார், கந்தசாமி, கனகராஜ், இலக்கிய அணி தலைவர் சக்திவேல், திமுக வட்ட அவைத்தலைவர் சுப்பிரமணியன், வட்டப்பிரதிநிதி ஜெபக்குமார் ரவி, போல்பேட்டைபகுதி பிரதிநிதி ஜோஸ்பர் ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக