வியாழன், 8 ஆகஸ்ட், 2024

திரேஸ்புரம் பெண்கள் மேயர் ஜெகன் பெரியசாமி க்கு இனிப்பு வழங்கி சால்வை அணிவிப்பு !!!

 

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 9-8-2024 

Photo news by sunmugasunthram Reporter

புதிதாக கால்வாய் தூத்துக்குடி திரேஸ்புரம் பெண்கள் மேயர் ஜெகன் பெரியசாமிக்கு இனிப்பு வழங்கி சால்வை அணிவித்து மேலும் திரேஸ் புரம் உள் பகுதியில் புதிய கால்வாய் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள் .

இதுபற்றி செய்தியாவது:-

     தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் நடைபெற்ற பொதுமக்களிடம் குறை தீர்க்கும் முகாமிற்கு மேயா் ஜெகன் பொியசாமி தலைமை வகித்தார்.


 இணை ஆணையர் ராஜாராம், துணை மேயர் ஜெனிட்டா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



 பொதுமக்கள் சாலை கால்வாய் மின்விளக்கு பெயர் மாற்றம் முகவாி மாற்றம் வீடு கட்டுவதற்கு அனுமதி உள்ளிட்ட பல்ேவறு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோாி மச்சாது நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் கிருஷ்ணன், கவுன்சிலர் செபஸ்டின்சுதா, உள்ளிட்ட பலர் மனு கொடுத்தனர்.

மேயர் ஜெகன் பெரியசாமி பேட்டி!!

  மேயர் ஜெகன் பொியசாமி அளித்த பேட்டியில்...


 “தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க நான்கு மண்டலங்களிலும் கடந்த மாதம் முதல் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மூலம் 500க்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்கள் கொடுத்ததில் 50 சதவீதம் முழுமையாக தீர்வு காணப்பட்டது.


 அதிலும் உடனடியாக பெயர் மாற்றம் முகவாி மாற்றங்கள் செய்து வழங்கப்படுகிறது.


 மாநகர பகுதிகளில் கொடுக்கின்ற கோாிக்கை மனுக்களில் சாலை கால்வாய் வசதிகள் எந்த பகுதிக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்று ஆய்வு மேற்கொண்டு சாலைகள் முன்னுரிமை அடிப்படையில் அந்தந்த பகுதியில் அமைக்கப்படும்.

தூத்துக்குடியில் 2000 சாலைகள் அமைப்பு !!!

 தூத்துக்குடி மாநகரில் இதுவரை 2000க்கும் மேற்பட்ட சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.


 வருங்கால தலைமுறையினர் நலன் கருதி முன்னேறும் தூத்துக்குடி என்ற அளவில் திட்டங்கள் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 


புதிதாக 15 பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன. ஸ்டேட்பேங்க் காலணி, அமொிக்கன் சாலை, உள்ளிட்ட பல சாலைகள் விாிவுப்படுத்தப்பட்டுள்ளன. 


சில சாலைகள் இசிஆர் சாலைவரை சென்று இணைகிறது. 


வளர்ச்சி பணி!!!

60 வார்டு உள்ள பகுதிகளில் குறிப்பாக சங்கரபோி மீளவிட்டான், பண்டாரம்பட்டி உள்ளிட்ட புறநகர் பகுதியாக இருந்த மாநகாில் இணைக்கப்பட்ட பிறகு பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ளோம்.


 நான்காம் கேட் பகுதியில் மேம்பாலம் அமைப்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


 அதே போல் நிகிலேசன்நகாிலும் போக்குவரத்து நொிசலை குறைக்கும் வகையில் ஓரு மேம்பாலம் அமையவுள்ளது.


 பாதாள சாக்கடை திட்டம் மாநகரத்தில் 60 வார்டிலும் நடைபெற்று வருகிறது. தொழிற்சாலைகள் அதிகம் உள்ள தூத்துக்குடி மாநகரில் மாசுவை குறைப்பதற்காக தொடர்ந்து மரங்கள் நடம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


 ஏற்கனவே 70 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ள நிலையில் தற்போது 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 


தொடர்ந்து மாசுவை குறைக்கும் வகையில் மாநகர பகுதிகளிலும் நடப்பட்டு வருகிறது அத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.


 தற்போது தருவைகுளம் பகுதியில் 525 ஏக்கர் பரப்பளவில் மரங்கள் நடுவதன் மூலமாக கழிவு நீர் வீணாக கடலுக்கு செல்வது தவிர்க்கப்படுகிறது என்றார்.

.

மேயர் ஆய்வு!!!

 பின்னர் மேயர் ஜெகன்பொியசாமி அருகில் உள்ள ஸ்டேட் பாங்க் காலனி ஆரம்பசுகாதார நிலையத்தை ஆய்வு மேற்கொண்டார். 

பாக்ஸ்: 

வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் முகாமில்

தங்களது பகுதியில் புதிதாக கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது என  திரேஸ்புரத்தை சேர்ந்த பெண்கள் இனிப்பு வழங்கி சால்வை கொடுத்தனர் 

மேலும் மேயருக்கு கோரிக்கை வைப்பு

 சில குறுகலான சந்து பகுதியில் கால்வாய் அமைக்காமல்இருப்பதால் மிகவும் சிரமப்படுகிறோம் அதை உடனடியாக செய்து தரவேண்டும் என்று கோாிக்கை வைத்தனர்.


 பொதுமக்கள் பங்களிப்பு நிதியுடன் அந்த பணியை உடனடியாக செய்து கொடுக்கலாம்.


 இல்லையேல் எங்கள் நடைமுறைப்படி அந்த கால்வாய் பணி கொஞ்சம் தாமதமாக நடைபெறும் செய்து தருகிறேன் என்று மேயர் கூறினார். 




3வது வார்டு சுப்பையாநகரைசோ்ந்த முத்துலட்சுமி, வேல்சாமி, முனியப்பன், திருமால்குமார், உள்ளிட்ட பல பொதுமக்கள் தங்களது பகுதியில் குடிதண்ணீர் குறைபாடுகளை தீர்த்து வைத்தற்கு நன்றி தொிவித்து சால்வை அணிவித்தார்கள்.



 இன்று 8-8-2024 கொடுக்கப்பட்ட மனுக்களில் இரண்டு பேருக்கு உடனடியாக ஆணையை வழங்கினார்.



குறைதீர்க்கும் முகாமில் உதவி ஆணையர் பொறுப்பு நரசிம்மன், மாநகராட்சி நகர்நல அலுவலர் வினோத்ராஜா, உதவி செயற் பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் பிாின்ஸ் ராஜேந்திரன், நகர அமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர் ராமசந்திரன், சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, மாநகராட்சி மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி, கவுன்சிலர்கள் ஜாக்குலின்ெஜயா, பவாணி, செபஸ்டின் சுதா, சுப்புலட்சுமி, காந்திமதி,நாேகஸ்வாி,கற்பககனி, தெய்வேந்திரன், அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் எமல்டன், வேல்முருகன், காங்கிரஸ் மண்டலத்தலைவர் சேகா், வட்டப்பிரதிநிதி மார்ஷல், பகுதி பிரதிநிதிகள் ேஜாஸ்பர் பிரபாகர், உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக