அமைச்சர் பொன்முடி ராஜினாமா செய்ய வேண்டும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முயற்சியால் இந்த ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
போலி போராசிரியர் மோசடி விஷயத்தில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என பரபரப்பாக தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார்
இது பற்றிய செய்தியாவது:-
தமிழகத்தில் கல்வித் துறையில் தமிழக அரசுக்கு தெரியாமல் உயர்கல்வி அமைச்சகத்துக்கு தெரியாமல் இவ்வளவு பெரிய ஊழல் நடந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்!!!
இதுபோன்ற ஒரு மோசமான சூழ்நிலையை கட்டுப்படுத்த முடியாத உயர் கல்வித் துறை அமைச்சர் தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும்.
தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி ராஜினாமா செய்ய வேண்டும்
போலி பேராசிரியர் நியமன மோசடி!!!
இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பாக செயல்பட்டு வந்தது.
அந்தப் புகழை குழி தோண்டி புதைக்கும் வகையில், அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்தில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் நடந்துள்ள போலி பேராசிரியர் நியமன மோசடி நடந்துள்ளது.
ஊழல்!!!
ஒரு பேராசிரியர் ஒரு கல்லூரியில் தான் பணிபுரிய முடியும்.
ஆனால், ஒரு பேராசிரியர் பல கல்லூரிகளில் பணியாற்றுவதாக போலிஆவணங்கள் உருவாக்கப்பட்டு மிகப்பெரிய மோசடியும், பல நூறு கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கல்லூரி பட்டியலில் ஒரு பேராசிரியர் இருக்க, பாடம் நடத்த, மிக மிக குறைந்த சம்பளத்தில் வேறு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பல்லாயிரம் மாணவர்களின் வாழ்க்கையை சீரழித்த பொறியியல் கல்லூரி போலி பேராசிரியர் நியமன மோசடி விஷயத்தில் தமிழக அரசும், மத்திய அரசும் தலையிட்டு
கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களின் தேர்வு சதவிகிதம் குறைந்து வருவதும், தரமற்ற கல்வியால் மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் திறனற்ற மாணவர்களாக வெளிவந்துள்ளதால் தொடர்ந்து தங்களுடைய துறைகளில் பணியாற்ற முடியாமல்
சுய தொழிலும் ஆரம்பிக்க முடியாமல் கடந்த பல ஆண்டுகளாக மாணவர்கள் தவித்து வந்ததது காரணம் இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவரின்
சீரிய முயற்சியால்
இந்த ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மோசடியில் ஈடுபட்டுள்ளதாக 972 பேராசிரியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஒரே பேராசிரியர் பல்வேறு பொறியியல் கல்லூரிகள் பணியாற்றுவது போல் மோசடி செய்யப்பட்டுள்ளது.
ஏறத்தாழ 295 பொறியியல் கல்லூரிகளில் ஒரே பேராசிரியர் பல்வேறு கல்லூரிகளில் போலியாக பணியாற்றியதற்கான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து 150 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ்,
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த கல்வியியல் மோசடி குறித்து முழுமையாக ஆய்வு செய்து தேவையான சட்ட பூர்வ நடவடிக்கைகளை உறுதியுடன் எடுக்க வேண்டும்.
ஆனால், ? அவரோ மோசடிகள் ஈடுபட்ட பேராசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற தடை விதிக்கப்படும்.
போலிப் பேராசிரியர் நியமன மோசடி குறித்து உரிய விளக்கம் அளிக்காத பொறியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
.இது ஒரு சாதாரண நடைமுறை, குற்றங்களை மூடி மறைப்பதற்கான முன்னேற்பாடு போல் இருக்கிறது என்பதை துணைவேந்தர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
கல்வித்துறை ஊழலை என்றுமே யாருமே பொறுத்துக் கொள்ள கூடாது.
போலிப் பேராசிரியர் நியமன ஊழலில் ஈடுபட்ட கல்லூரி
அதிபர்கள், நிர்வாகத்தினர் உடந்தையாக செயல்பட்ட கல்லூரி முதல்வர் உள்ளிட்ட குழுவினர் மீது
குற்றவியல் சட்டப்படி
கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் பொறியியல் கல்லூரி போலி பேராசிரியர் நியமன
மோசடி குறித்து விவாதிக்கப்படவில்லை என்று துணைவேந்தர் பத்திரிகையாளர் சந்திப்பிலேயே கூறியது ? அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழக அரசு , மாணவர் நலனை கருத்தில் கொண்டு, தமிழக கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள சீர்கேடுகளை முழுமையாக கண்டுபிடிக்கப்படும் வகையில் தமிழகம் முழுக்க உள்ள பொறியியல் கல்லூரிகளில் முழுமையான கள ஆய்வு நடத்த வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த போலி பேராசிரியர் நியமனம் மோசடி குறித்து சிபிஐ விசாரணை நடத்துவதற்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
ஏ.என்.எஸ்.பிரசாத்
தமிழக பாஜக
மாநில செய்தி தொடர்பாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக