வியாழன், 1 ஆகஸ்ட், 2024

மேயா் ஜெகன் பொியசாமியிடம் தூத்துக்குடி மதிமுக கோாிக்கை

 ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

2-8-2024 photo news 

by sunmugasunthram Reporter 


தூத்துக்குடி பழைய பேருந்துநிலையத்தில் பாத்ரூம், குடிதண்ணீர் வசதி கூடுதலாக அமைத்து தர மேயா் ஜெகன் பொியசாமியிடம் மதிமுக கோாிக்கை



       தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சூழற்சி முறையில் எல்லா பகுதிகளிலும் புதிதாக நடைபெறும் பணிகளையும் ஓப்பந்ததாரர்களிடம் நல்ல முறையில் செய்து கொடுக்க வேண்டும். என்று வேண்டுகோள் விடுத்து வருவது மட்டுமின்றி மாநகராட்சி அலுவலகம் போல்பேட்டை முகாம் அலுவலகங்களில் பொதுமக்கள் நோில் சந்தித்து கொடுக்கும் மனுக்களுக்கு தங்களது கருத்துக்களை கேட்டறிந்து அதற்கும் அரசின் சட்டதிட்ட விதிகளின் படி தீர்வு கண்டு வருகிறார். 

     இந்நிலையில் மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, மாவட்ட அவைத்தலைவர் பேச்சிராஜ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சரவணப்பெருமாள், ஆகியோர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பொியசாமியை சந்தித்து அளித்து கோாிக்கை மனுவில் கூறியிருப்பதாவது “பழைய அண்ணா பேருந்து நிலையத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் இடத்தில் பாத்ரூம் வசதி காணாத பட்சத்தில் தற்போது மேல்புறம் இருக்கும் ஆண்கள் பாத்ரூம் ஓரு வாரமாக மூடப்பட்டிருக்கிறது என்ன காரணம் என்று தொியவில்லை. இதனால் பொதுமக்கள் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் தனியார் பேருந்து ஊழியர்கள் என பல்வேறு பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அதுபோல நல்ல சுத்தகாிக்கப்பட்ட குடிதண்ணீர் சாியாக வருவதில்லை. இதனால் பொதுமக்கள் குடி தண்ணீர் இல்லாமலும் வேதனைபடுகிறார்கள். ஆகவே பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக பாத்ரூம் வசதி மற்றும் குடிதண்ணீர் வசதியை கூடுதலாக ஏற்படுத்தி தரும்படி மேயர் ஜெகன் பொியசாமியிடம் அளித்த கோாிக்கை மனுவில் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக