▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂
4-8-2024 photo news
by sunmugasunthram Reporter
தூத்துக்குடியில் அதிமுக உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டைகளை முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார்.
இது பற்றிய செய்தியாவது:-
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான, சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கையொப்பமிட்ட புதிய உறுப்பினர் அடையாள அட்டைகளை அதிமுக மாநில வர்த்தகஅணி செயலாளரும்; முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள மாநில வர்த்தகஅணி அலுவலகத்தில் வைத்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெ.பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் ரத்தினம், முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் என்.சிவசுப்பிரமணியன், வட்ட செயலாளர்கள் லயன்ஸ் டவுன் சகாயராஜ், அருண்குமார், அந்தோணி ராஜ், ஜெகதீஸ்வரன், முன்னாள் வட்ட செயலாளர்கள் ஹெய்னஸ், கோட்டாள முத்து, ஸ்டாலின், சகாயராஜ், கிளை செயலாளர்கள் மாரிமுத்து, ஜெய் கணேஷ், முனியசாமி, போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் சங்கர், பேச்சியப்பன், முருகன் மற்றும் சென்ட்ரிங் மனோகர், மணிகண்டன், ஆறுமுகம், சுப்புராஜ், அண்டோ, ஆபிரகாம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக