வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் அண்ணா பேருந்து நிலையத்தில் பொது நூலகம் இரண்டாம் தளம்!!!

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

30-8-2024 photo news 

by Arunan journalist 

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் அண்ணா பேருந்து நிலையத்தில்   இரண்டாம் தளம் பொது நூலகம்.


தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்தில்  பொது நூலகம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் முடிவு



தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று 30-8-2024 காலை 12 மணியளவில் நடைபெற்றது 


தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆணையர் மதுபாலன் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மற்றும்   வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.


 தமிழ்நாட்டில் பொதுமக்கள் அதிகம் கூடும் மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும்

பேருந்து நிலையங்களில் பொது மக்கள் காத்திருக்கும் நேரத்தை முறையாக பயன்படுத்தும்

வகையில் ரூ.3 கோடி செலவில் 100 நூலகங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது



அதன்படி அரசாணையினை செயல்படுத்தும் விதமாக தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு

மண்டலத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையம் எஸ் 14 அறை நுாலகம் அமைக்க

போதுமானதாக உள்ளதாகவும், அந்த அறையினை நூலம் செயல்பட ஏதுவாகவும்

அரசாணையின்படி ஒதுக்கீடு செய்துதர கேட்டு கடிதம் பெறப்பட்டுள்ளது.



இது தொடர்பாக தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலம் பழைய பேருந்து நிலையம்

(அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்) இரண்டாம் தளம் எஸ் 14 எண்ணிட்ட 754 சதுரடி உள்ள

அறையினை இலவசமாக நூலகம் செயல்பட ஒதுக்கீடு செய்து  மாமன்றத்தின்

தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 


 இரண்டாவது தளத்தில்

 பொது நூலகம்


 தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலம்

பழைய பேருந்து நிலையம் (அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்) இரண்டாம் தளம் எஸ் 14 - 754

சதுரடி உள்ள அறையில் இலவசமாக நூலகம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.


மேலும் பத்திரிகைகளில் வந்த செய்திகளில் சுட்டி காட்டிய படி தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் மற்றும் முத்துநகர் கடற்கரை பூங்காக்கள் பொதுமக்கள் பாத்ரூம் வசதி சரிசெய்யப்படும் மேலும்  தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பாத்ரூம் வசதி யும் சரி செய்யப்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார் 


இன்று நடைபெற்ற மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் 18 மற்றும் சிறப்பு தீர்மானம் 2 ம் நிறைவேற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக