▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂
24-7-2024 photo news
by Arunan journalist
பொதுமக்கள் இப் பகுதியில் குடிநீருக்காக தினமும் அல்லல் படுகிறார்கள் தூத்துக்குடி மாநகராட்சி வஞ்சிக்கிறது
தூத்துக்குடி தாளமுத்து நகரில் ஒரு பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்
முதலில் மாப்பிள்ளை யூரணி பகுதியை இனைத்து விட்டு பின் என்ன காரணம் என்று தெரிவிக்காமல் ஏன் இனைக்க வில்லை ? தூத்துக்குடி மாநகராட்சி உடன் மாப்பிள்ளை யூரணி பகுதியை இனணக்க வேண்டும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளனர்.
பத்திரிக்கை செய்தி
மாப்பிள்ளையுரணி ஊராட்சியை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க கோரி தீர்மானம்.
தூத்துக்குடி மாநகராட்சி துவங்கப்பட்ட. காலத்தில்
மாப்பிள்ளையூரணி
ஊராட்சி மாநகரில் அறிவிக்கப்பட்டு
இணைக்கப்பட்டிருந்தது .
பின்பு என்ன காரணம் என்று
அறிவிக்காமலேயே மாநகராட்சியில் இணைக்காமல் கழட்டி விடப்பட்டது?????
தொலைவில் உள்ள பகுதிகள் தூத்துக்குடி மாநகராட்சியுடன்
இணைக்கப்பட்டும், மாநகராட்சி ஒட்டிய பகுதியான மாப்பிள்ளையூரணி
ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்காததும்..
அந்த பகுதி மக்களை அரசு வஞ்சிப்பதாக உள்ளது.
மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட தாளமுத்துநகர் சுற்றியுள்ள
பகுதிகளில் உப்பளம் கட்டுமானம், மீன்பிடி தொழிலாளர்கள் அடர்த்தி யாக
குடியிருந்து வருகின்றனர்
அவர்கள் குடிநீருக்காக தினமும்அல்லல்படுகிறார்கள்.
மேலும் குடிநீருக்காக தாங்கள் பெறும் அன்றாடக் கூலியில் கனிசமானஅளவு செலவு செய்ய வேண்டியுள்ளது
எனவே மாப்பிள்ளையூரணி
ஊராட்சியை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைத்து 4வது பைப் லைன்
திட்டத்தை மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிகளுக்கு விரிவுப்படுத்த
வேண்டும்.
வங்கி அமைக்க கோரிக்கை !
2. தாளமுத்தநகர் பகுதியில் அரசுடமை வங்கி அமைக்க கோரி தீர்மானம்
தாளமுத்துநகர் பகுதி மக்கள் அடர்த்தியாக குடியிருக்கும் பகுதியாகும்
ஆதலால் வணிகர்களும் அதிகமாக உள்ள பகுதியாகும்
வணிகர்களும் வங்கி சேவை பெறவேண்டுமானால்பொதுமக்களும் 3கிலோமீட்டர்
தொலைவுக்கும் அதிகமாக செல்ல வேண்டியுள்ளது
எனவே தாளமுத்துநகர்
பகுதியில் அரசுடமை வங்கி கிளை துவங்க மாவட்ட நிர்வாகம் தக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3. தாளமுத்துநகர் பகுதில் துணை பேருந்துநிலையம் அமைக்க கோரிக்கை
தூத்துக்குடி பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களிலிருந்து
அதிகப்படியான மினி பேருந்துகள் தாளமுத்துநகர் பகுதிக்கு இயக்கப்படுகிறது
அந்த பேருந்துகள் தாளமுத்துநகர் சாலைகளில் ஒரே நேரத்தில் பல பேருந்துகள் நிற்பதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகி றது.
எனவே தாளமுத்துநகர்
பகுதியில் மினிபேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றி செல்வதற்காய் துணைபேருந்து நிலையம் அமைக்க வேண்டும்.
4. பொது நூலகம் அமைக்கக்கோரி தீர்மானம்
தாளமுத்துநகர்
பகுதி பொதுமக்களும் மாணவ,மாணவியரும்
பயன்பெறும் வகையில் பொது நூலகம் அமைக்க கோரியும் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
இப்படிக்கு
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
தாளமுத்துநகர் - கிளை
மாப்பிள்ளையூரணி ஊராட்சி
தூத்துக்குடி
மி.அந்தோணி சௌந்திரராஜன்
கிளை செயலாளர்
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக