▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂
23-7-2024 photo news
by Arunan journalist
"எதிர்க்கட்சிகளால் விமர்சிக்க முடியாத மாற்றமும் ஏற்றமும் கொண்ட மக்கள் நல பட்ஜெட்."
2047ல் சுதந்திர நூற்றாண்டை கொண்டாடும்போது உலக அளவில் பொருளாதாரத்தில் இந்தியா முதலிடத்தில் இருக்க வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் லட்சிய இலக்கு.
அந்த லட்சியத்தை அடையும் தொலைநோக்குடன் 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.
140 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில் இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு அளிப்பது மிகப்பெரிய சவால். அந்த சவாலை திறம்பட எதிர்கொண்டு இளைஞர்களின் கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்புக்கன பல்வேறு திட்டங்களை நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
குறிப்பாக 4 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சி அளிக்க ரூ. 2 லட்சம் கோடி,, உயர்கல்வி நிறுவனங்களில் மேல்படிப்புக்கு ரூ. 10 லட்சம் கல்விக்கடன்,
புதிதாக பணியில் சேரும் 30 லட்சம் இளைஞர்களுக்கு அரசு சார்பில் ஒரு மாத சம்பளம், 500 முன்னணி தொழில் நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி ஆகியவை இந்தியா இதுவரை கண்டிராத திட்டங்கள்.
இதுவரை வெறும் கோரிக்கைகளாக இருந்த திட்டங்கள் செயல்வடிவம் பெற இருக்கின்றன.
மகிழ்ச்சி !!!
தங்கம், வெள்ளி, செல்போன்கள் மீதான சுங்க வரி குறைப்பு, வேளாண் துறைக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு, அதிக விளைச்சல் தரக்கூடிய 109 பயிர் வகைகள் அறிமுகம், புற்றுநோய் மருந்துகளுக்கு வரி விலக்கு,
ரேஷன் கடைகளில் ஏழை குடும்பங்களுக்கு இலவச அரிசி, கோதுமை வழங்கும் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு என மத்திய பட்ஜெட்டின் அறிவிப்புகள் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், ஏழை, நடுத்தர மக்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளன.
எதிர் கட்சிகள் புலம்பல்!!!
இதனால்தான்...? பட்ஜெட்டை எதிர்க்க முடியாத எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும், காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்து விட்டதாக கூறியுள்ளனர்.
பிரதமர் மோடியின் நோக்கம்
அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவை உலகின் மூன்றாவது பொருளாதார நாடாக்குவது.
அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை, அவரது வழிகாட்டலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்திருக்கிறார்.
ஏ.என்.எஸ்.பிரசாத்
தமிழக பாஜக
மாநில செய்தி தொடர்பாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக