ஞாயிறு, 7 ஜூலை, 2024

தூத்துக்குடியில் தோழமை சங்கமம்

 ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

8-7-2024 பதிவு 11.00 am

செய்தி புகைப்படங்கள் 

அருணன் செய்தியாளர்

தூத்துக்குடியில் தோழமை சங்கமம் நேற்று மாலை வேளையில் மிக உருக்கமான நினைவலைகளுடன் நடைபெற்றது.





தூத்துக்குடியில் தோழமை சங்கமம் தோள் கொடுத்த தோழமைகளுக்கு தூத்துக்குடி மக்களின் இதய நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியாக அமைந்தது .



இதுபற்றிய செய்தியாவது:-


ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் போரா சிரியர் ஃபாத்திமா பாபு தலைமையில் நேற்று மாலை 7-7-2024  தூத்துக்குடியில் தோழமை சங்கமம் நிகழ்வு தூத்துக்குடி மில்லர்புரம் ரூபவதி மஹாலில் மாலை 6 மணியளவில் நடைபெற்றது .



தூத்துக்குடியில் தோழமை சங்கமம் தோள் கொடுத்த தோழமைகளுக்கு தூத்துக்குடி மக்களின் இதயங்களில் நன்றி தெரிவிக்கும் நிகழ்வில்.....

முன்னதாக...

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரழந்த தியாகிகள் 16 பேர் திருவுருவ படத்தின் முன் மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் மல்க வந்திருந்த அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.




அடுத்ததாக...

தோள் கொடுத்த தோழமைகளுக்கு தூத்துக்குடி மக்களின் இதய நன்றி தெரிவிக்கும் விதமாக அரசியல் கட்சி தலைவர்கள் நிர்வாக இயக்குனர் மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி டி ஃபேன் உள்ளுர் சட்ட போராளிகள் அறிவியல் நெறியாளர் நித்தியானந்த ஜெயராம் மற்றும் உள்ளூர் போராளிகள் அனைவரையும் கெளவுர படுத்தி நன்றி தெரிவித்து சங்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.













தோழமை சங்கமம் நிகழ்ச்சியில்....

திருமுருகன் காந்தி மே17 ஒருங்கிணைப்பாளர் நெல்லை முபாரக் SDPI.மாநில தலைவர் செந்தில் அதிபன் மதிமுக மாநில ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் யோகேஸ்வரன் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் அற்புத ராஜ் சமத்துவ மக்கள் கழகம் ஆசீர் மக்கள் கண்காணிப்பகம் விநாயக மூர்த்தி மத்திய வணிகர் சங்க தலைவர் மற்றும் பாஸ்கர், ஜெரோன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மின்னல் அம்ஜத் HMS தூத்துக்குடி மாவட்ட தலைவர் ராஜாபோஸ் ரீகன் மாநில ஒருங்கிணைப்பாளர் நாட்டு படகு சங்கம் நெய்தல் அண்டோ நெய்தல் எழுத்தாளர் வாசகர் இயக்கம் அகமது இக்பால் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் வழக்கறிஞர் மாடசாமி மதிமுக மகாராஜன் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்ப உறவுகள் போராட்டத்தில் பங்கெடுத்த வழக்கறிஞர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தோழமை சங்கமம் நிகழ்ச்சியில்....

பேராசிரியர் ஃபாத்திமா பாபு பேசுகையில்....


"தோழமை சங்கமம்"

நிகழ்வின்

நோக்கம்

ஈகையாளர்களுக்கு அஞ்சலி செலுத்துவது,

மற்றும்

ஸ்டெர்லைட் ஆலையை

மூடக் கோரிய வழக்குகளில் வாதாடிய

உயர்நீதி மன்ற வழக்குரைஞர்களை மக்களுக்கு

அறிமுகம் செய்வது தங்களுடன் துணை நின்ற அரசியல் தலைவர்கள், அமைப்புக்களின் தலைவர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நன்றிகள் தெரிவிப்பது.

கூடவே மக்கள் ஒற்றுமையாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை அறிவுறு

த்திகிறேன்


அடுத்ததாக...

தோள் கொடுத்த தோழமைகளுக்கு தூத்துக்குடி மக்களின் இதய நன்றி தெரிவிக்கும் விதமாக அரசியல் கட்சி தலைவர்கள் சட்ட வல்லுநர்கள் மற்றும் உள்ளூர் போராளிகள் அனைவரையும் கெளரவ படுத்தி நன்றி தெரிவித்து சங்கு நினைவு பரிசு இன்றைய தினம் வழங்கப்படுகிறது.


1993ல் தொடங்கிய ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் 2024 ல் இந்த ஆண்டு (31 வருடம் )முடிவுக்கு வந்தது


ஸ்டெர்லைட் ஆலை மூடல் தீர்ப்பு இப்போது யாரால் நிகழ்ந்தது தெரிந்து கொள்வோம்!!!


எது யாரால் ? முடிவு க்கு வந்தது என நாம் அனைவரும் தெரிந்து கொள்ளவும்

நம்மோடு துனை நின்ற சட்ட போராளிகள் இங்கு உள்ளார்கள் அரசியல் கட்சி தலைவர்கள் வியாபார சங்க தலைவர்கள் மீனவர்கள் சங்க தலைவர்கள் ஆகியோர் அவர்களுக்கு நம் தூத்துக்குடி மக்களின் இதய நன்றி செலுத்தும் விதமாக இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது


அவர்களுக்கு சங்கு நினைவு பரிசு வழங்கபடுகிறது

முக்கியமாக பலர் தவிர்க்க முடியாத காரணங்களால் இங்கு வர இயலவில்லை அவர்களுக்கும் தூத்துக்குடி மக்களின் இதய ஆழத்தில் இருந்து நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஃபாத்திமா பாபு.



அடுத்தடுத்து பேசியவர்கள்....

வலி மிகுந்த கடந்த பாதையை நினைவு படுத்தினர்.



.நாசகார ஸ்டெர்லைட் ஆலை தமிழகத்தில்..

1993 ல் அதிமுக ஆட்சியில் வந்தது.


தூத்துக்குடி மக்களின் பலத்த எதிர்ப்பிலும் ஆட்சியாளர்களின் அதிமுக  திமுக என மாறிமாறி ஆட்சி வந்தாலும் முழு ஆதரவில் செயல் பட்டது ஸ்டெர்லைட் ஆலை

அதேபோல்..

தேர்தல் நிதி நன்கொடை வழங்கி  மத்தியில் காங்கிரஸ் பாஜக முழு ஆதரவு உடன் இருந்தது .


ஸ்டெர்லைட் ஆலை மூடல் திறப்பு என்றிருந்தது.

2010-ல் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஆலை மூடப்பட்டது. 


ஆனால் 2013-ல் உச்சநீதிமன்றம் ஆலையின் விதிமீறலுக்கும், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தியதற்கும்100 கோடி ரூபாய் அபராதம் விதித்து ஆலை  இயங்குவதற்கு உத்தரவிட்டது.

 


தூத்துக்குடியிலும் ஆளும் கட்சி எதிர் கட்சி எம்பி,,எம்எல்ஏ, அமைச்சர்கள் இதில் உள்ளடக்கம் அடக்கமாயினர்.


கொள்கை உறுதியற்ற எதிர்ப்பாளர்கள் மாமூலாக வரிசையாக ஒதுங்கினார்கள் ?

பத்திரிகையாளர் களோ??? கோடிக்கணக்கான விளம்பரங்களால்  உண்மையை பேச எழுதாமல் மறைந்தனர் 


இந்நிலையில்... முந்தைய திமுக ஆட்சியில் ஸ்டாலின் துனை முதல்வர் ஆக இருந்த போது தூத்துக்குடி மக்கள் எதிர்ப்பில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு மேலும் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்து கொள்ள முழு அனுமதி வழங்கப்பட்டது..


எதிர்ப்பு மக்கள் மத்தியில் அதிர்வை ஏற்படுத்தியது 


கட்டமைப்பு!!!

இதை தொடர்ந்து முன்னிலும் வேகமாக ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ஃபாத்திமா பாபு கடந்த 2016 ல் தூத்துக்குடி பனிமய மாதா கோவில் அருகே உள்ள பெல் ஹோட்டல் கூட்டரங்கில் எதிர்ப்பாளர்கள் அனைவரையும் வரவைத்து ஒன்றினைந்து கூட்டம் கட்டமைப்பு செய்தார்.


அதன் பின்னர் மக்கள் மத்தியில் வேகமெடுத்தது குமரெட்டியாபுரம் நூறு நாட்கள் போராட்டம் மற்றும் 2018மார்ச் 24தேதி மாலை தூத்துக்குடி பன்னிரண்டு வாசல் மையவாடி எதிர்ப்புறம் உள்ள மைதானத்தில் லட்சத்தை தொட்ட தூத்துக்குடி பொதுமக்கள் வீறு கொண்ட எழுச்சி திரளான கூட்டம் தூத்துக்குடி அக்கா என்றழைக்கப்படும் பேராசிரியர் ஃபாத்திமா பாபு தலைமையில் வியாபாரி சங்க தலைவர்கள் மீனவர்கள் சங்க தலைவர்கள் முன் நின்று நடத்தினார்கள் போராட்டம் வலிமை உணர்த்தியது .

காவல்துறை இதனின் ஏவல் துறையாக ...

பேராசிரியர் ஃபாத்திமா பாபு உட்பட போராடிய பெண்களை நெல்லை கொக்கிரகுளம் கிளை சிறையில் கைது செய்யப்பட்டு அடைத்தது.



அதன் பின்னும் சும்மா நில்லாமல் அப்போதே ai கிராஃபிக் ஸ் விடியோ சித்துக்களை நாசா கார ஆலை தரப்பு மீடியா மற்றும் இனையதளத்தின் முலம் பின்னடைவை ஏற்படுத்தியது.




அதன் பின்னர் 2018 மே 22-ல் போராளிகள் மற்றும் தூத்துக்குடி பொது மக்கள் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக முட வேண்டும் அதற்கான மனு கொடுக்க தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் செய்தனர்.



அப்போது ... காவல்துறை கண்மூடித்தனமாக களத்தில் நின்றவர் களை குறி பார்த்து சினேப்பர் கன் மற்றும் நவீன ரக துப்பாக்கிகள் முலம் ஈவுயிரக்கமின்றி அப்பாவிகளை சுட்டு தள்ளியது இதில் தூத்துக்குடி உள்ள 16 பேர்களின் உயிர் பலியான பரிதாபமான நிகழ்வு ஏற்பட்டது..




அது இன்று வரை பாதிக்கப்பட்டவர்கள் மறக்கவோ மன்னிக்கவோ இயலவில்லை 


இவர் கள் உயிர் தியாகத்தால்...

நிலைப்பாடு மாறியது அரசியல் கட்சிகள்!!!


இதன் பின் அதிமுக நிலைப்பாடு மாறியது

உலக அளவில் தமிழர்கள் கொந்தளிப்பு எதிரொலித்து.


மக்கள் உணர்வு களை முன்நிறுத்தி அதிமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைத்தனர் 


ஸ்டெர்லைட் திறக்க முயற்சிகள் இறங்கியதும் வழக்கில் எதிராக தமிழக அரசு நின்றது


துப்பாக்கி சூட்டில் இருந்து..திமுக தலைவர் ஸ்டாலின் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பில் உறுதியாக இருந்தார் முதல்வரான பின்பும் தொடர்ந்து கொண்டு இருக்கிறார்கள் .


இறுதியாக... 2024 ல் உச்ச நீதிமன்றம் மேல் முறையீடு தீர்ப்பில் ஸ்டெர்லைட் ஆலை முடியது திறக்க முடியாது என்று வரலாற்று சரித்திரம் மிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது

நிம்மதி கிடைத்ததுள்ளது.











 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக