புதன், 10 ஜூலை, 2024

முதியவரிடம் செல்போன் பேசி 3,21,000 ரூபாய் ஏமாற்றிய மதுரை சேர்ந்த மோசடி பேர்வழி தூத்துக்குடி காவல்துறை அதிரடி கைது சிறையில் அடைப்பு

 தூத்துக்குடி மாவட்டம் : 10.07.2024


தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 3,21,000/- பணம் மோசடி செய்தவர் கைது - சைபர் குற்ற பிரிவு போலீசார் நடவடிக்கை

.

பிச்சைக்கண்ணு (43)

இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவரின் செல்போனுக்கு 9080575307 என்ற தெலைபேசி எண்ணிலிருந்து பேசிய அடையாளம் தெரியாத மர்மநபர் தனது பெயர் மோகன்ராஜ் என்று கூறி அறிமுகமாகியுள்ளார்.



 பின்னர் தொடர்ந்து பேசிய மர்மநபர் மேற்படி முதியவர் மகனுக்கு பொதுப்பணித்துறையில் (PWD) ஓட்டுநர் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். 



அதனை நம்பி மேற்படி முதியவர், மோகன்ராஜ் என பேசிய அந்த மர்மநபர் கூறிய வங்கி கணக்கிற்கு பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூபாய் 3,21,000/- பணத்தை அனுப்பியுள்ளார்.*


பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்த மேற்படி முதியவர் இதுகுறித்து NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்.


மேற்படி புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் . உன்னிகிருஷ்ணன் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர்  ஜோஸ்லின் அருள் செல்வி தலைமையிலான சைபர் குற்றப்பிரிவு போலீசார் மோசடி செய்தவரை  கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டதில் மதுரை கே.கே நகர் சுப்பையா காலனியைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் பிச்சைக்கண்ணு (43) என்பவர் மேற்படி முதியவரிடம் மோகன்ராஜ் என கூறி  பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.


இதனையடுத்து மேற்படி போலீசார் நேற்று (09.07.2024) மதுரை வக்போர்டு கல்லூரி அருகே வைத்து மோசடி எதிரி பிச்சைக்கண்ணு என்பவரை கைது செய்து தூத்துக்குடி அழைத்து வரப்பட்டு இன்று தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். IVல் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையிலடைத்தனர்.


 மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக