புதன், 10 ஜூலை, 2024

அந்த தள்ளாத வயதிலும் பெரியார் கணினி பார்த்தார்? தூத்துக்குடியில் கனிமொழி எம் பி பேச்சு!

அந்த தள்ளாத வயதிலும் பெரியார் கணினி பார்த்தார்? 

மாறுதல்களை ஆசிரியர்களும் உள்வாங்கிக் கொண்டு மாணவர்களுக்கு அதைச் சொல்லித் தர வேண்டும் ?

என கனிமொழி எம்.பி பேசினார்

இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி ஜின் பேக்டரி ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான கையடக்க கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 



இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. 

46ஆசிரியர்களுக்குஇலவச கையடக்க கணினி வழங்கினார்.

தந்தை பெரியார்!!!

 அப்போது கனிமொழி எம்பி பேசுகையில்:-

 எதிர்காலத்தின் மீது நம்பிக்கை தரக்கூடிய நிகழ்ச்சியாக இந்த நிகழ்வு இருக்கிறது.


 இன்றைக்கு மாறிக்கொண்டிருக்கின்ற உலகத்தில் நமது கைப்பேசி, ஒரு கணினியாக மாறிக்கொண்டு இருக்கிறது. 


தந்தை பெரியார் சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினி வந்த பொழுது, ...

அதை பார்க்கவேண்டும் என்று தள்ளாத வயதிலும் சென்று அந்த கணினியைப் பார்த்தார். 


முதலாவதாக இருந்த கணினி மிகவும் பெரியதாக இருந்தது, 


பிறகு சிறியதாக மாறி ? தற்போது கைப்பேசி ஒரு கணினியாகத் தான் இருக்கிறது.


 இந்த மாறுதலை ஆசிரியர்களும் உள்வாங்கிக் கொண்டு மாணவர்களுக்கு அதைச் சொல்லித் தர வேண்டும். 


நம்மை விட நமது பிள்ளைகள் அடுத்த தலைமுறையைச் சார்ந்தவர்கள், நமக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கூட அவர்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

இப்போது உள்ள மாணவர்கள் ஆசிரியர்களுக்கு சொல்லி கொடுப்பார்கள்!!!

 இப்போதுள்ள மாணவர்கள் தொழில்நுட்பத்தோடு பிறந்தவர்கள் அவர்களைத் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் அளவுக்கு அறிவு சார்ந்தவர்களாக இருக்கிறார்கள்.


 அப்படிப்பட்ட ஒரு தலைமுறையுடன் நாம் பழகிக் கொண்டிருக்கிறோம்.

மாணவ-மாணவியர் இப்படித்தான் இருக்க வேண்டும், அப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று சொன்ன காலம் முடிந்துவிட்டது.


 அனைத்தையும் தாண்டி நாம் அவர்களுடன் நண்பர்களாகப் பழக வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் என்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில்...

அமைச்சர் கீதாஜுவன்  

 தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினா, வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி, பெருமாள் கோவில் அறங்காவல் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் மணி, அல்பட் உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

உதவி தலைமை ஆசிரியர் ஹேமா பத்ம ஹேனா, தலைமை வகித்தார்

உதவி தலைமையாசிரியர் பவானி நன்றியுரையாற்றினார்.

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 10-7-2024செய்தி புகைப்படங்கள் த.சண்முகசுந்தரம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக