வியாழன், 2 மே, 2024

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் திமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல்ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் திறந்து வைத்தார்


தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் திமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல்  ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கினார்.



      தூத்துக்குடி கோடைவெயில் வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில் தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், மாநில இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதிஸ்டாலின் ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர்.



      அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடைபராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின் படி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி  ஜோதிபாஸ்நகர், சமீர்வியாஸ்நகர், கிளைக்கழகம் சார்பில் இரு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தலை ஓன்றிய செயலாளரும் ஊராட்சி ஓன்றிய தலைவருமான சரவணக்குமார் திறந்து வைத்து மோர், சர்பத், பழரசம், ரோஸ்மில்க், இளநீர், எலுமிச்சை ஜூஸ், ரஸ்னா,  உள்ளிட்ட குளிர்பானங்கள், மற்றும் தர்பூசணி பழம், வாழைப்பழம், செவ்வாழை, அண்ணாசிபழம்,  போன்ற பழவகைகளையும் பொதுமக்களுக்கு வழங்கினார்.

       நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளரும் ஒன்றிய கவுன்சிலருமான அந்தோணிதனுஷ்பாலன், ஓன்றிய திமுக அவைத்தலைவர் ஜோதிடர் முருகன், துணைச்செயலாளர்கள் கணேசன், ராமசந்திரன், வசந்தகுமாாி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, சக்திவேல், ஜேசுராஜா, கிளைச்செயலாளர்கள் வேல்ராஜ், முருகன், முருகவேல்ராஜ், சந்திரசேகா், மற்றும் மாாியப்பன், செல்வகுமார், கௌதம், மகளிர் அணி சண்முகத்தாய்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக