சனி, 16 மார்ச், 2024

நீங்களும் பத்து ருபாய் இயக்கத்தில் சேரலாம் இலவசம் மற்றும் கட்டணம் விவரங்கள்!!!

▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒 𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂

17-3-2024

🗞️ by arunan journalist 

பத்து ரூபாய் இயக்கத்தில் உறுப்பினர் சேர விண்ணப்பம் பூர்த்தி செய்து இரண்டு புகைப்படங்களுடன் தலைமை அலுவலகத்திற்கு சாதாரண தபாலில் அனுப்பி வையுங்கள். 

தாங்கள் சேர விரும்பும் கட்டணம் மற்றும் இலவசம் என குறிப்பிடலாம் .



இது பற்றிய செய்தியாவது:-

 கட்டணம்:-

பத்து இயக்கம் இயக்கம் 

உறுப்பினர் கட்டணம்

 ரூ 500

TEN RUPEE MOVEMENT SB No: 6906751332 Indian Bank Rasipuram Branch IFSC Code: IDIB000R014 அல்லது 

Gpay 9445675801 [nalvinai]

( தனி நபர் உறுப்பினர் சேர்க்கைக்கு முக்கியத்துவம் வழங்குவதில்லை அடையாள அட்டை காலதாமதமாக வரும்) கட்டணம் இல்லாத உறுப்பினர் அடையாள அட்டை ஒரு வார கால அவகாசத்தில் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்) 


இலவசம் 

பத்து ரூபாய் இயக்கத்தில் கட்டணம் செலுத்தாமல் உறுப்பினர் சேரலாம்


வழிமுறைகள் 1:  

ஊழலுக்கு எதிரான செயல்பட்டதால், பொது மக்கள் பிரச்சினைகளுக்கு போராடியதால், தகவல் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தியதால் பொய் வழக்குகளால் பாதிக்கப்பட்டவர்கள் பத்து ரூபாய் இயக்கத்தில் இணைய எவ்வித கட்டணமும் இல்லை.

உங்களை பற்றிய முழுமையான தகவல்களை விபரத்தையும் பத்து ரூபாய் இயக்கத்தின் உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து தலைமை அலுவலகத்திற்கு தபாலில் அனுப்பி வையுங்கள் 

உங்களை பத்து ரூபாய் இயக்கத்தின் ஆயுள்கால சிறப்பு உறுப்பினராக எவ்வித கட்டணமும் இல்லாமல் பத்து ரூபாய் இயக்கத்தில் இணைத்து கொள்ள உள்ளோம். உங்களை பத்து ரூபாய் இயக்கம் தத்து எடுத்து கொன்டு உங்களுடைய பாதுகாப்பிற்காகவும் நீங்கள் ஏற்கனவே எடுத்து பாதிப்புகளுக்கு உள்ளான விசயத்தில் நியாயமான கோரிக்கைகளை வெற்றி பெற வழிகாட்டுதல் வழங்க உள்ளோம்.


 வழிமுறைகள் 2: 

பத்து ரூபாய் இயக்கத்தின் உறுப்பினர் அட்டை பெற கட்டணத்தை நீங்களே முடிவு செய்யலாம்.

ஊழலற்ற கிராமத்தை உருவாக்க பத்து ரூபாய் இயக்கத்தில் கிராம ஊராட்சி அளவில் செயல்பட தயாராக உள்ள நண்பர்கள் (குறைந்த பட்சம் 7 நபர்கள்) உங்களுக்குள் கலந்து ஆலோசித்து கிளை அமைப்பு கூட்டம் நடத்தி ஊராட்சி அளவில் ஒரு ஒருங்கிணைப்பாளர் மற்றும் கிராம ஊராட்சி அளவில் உங்கள் கிராமத்திற்கு தேவையான எண்ணிக்கையில் செயலாளர்கள் துணை செயலாளர்கள் ஆலோசகர்கள் (தலைவர், பொருளாளர் தவிர) நீங்களாகவே தேர்வு செய்து கொண்டு பொறுப்பாளர்கள் பட்டியலை பத்து ரூபாய் இயக்கத்தின் தலைமை அலுவலகத்திற்கு சாதாரண தபாலிலும் பொது செயலாளர் வாட்ஸ்அப் எண் 9445675801 க்கும் அனுப்ப வேண்டும்.



உங்கள் கிராமத்தில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு விளம்பர பலகைகள் பத்து ரூபாய் இயக்கத்தின் கிளை சார்பாக வைக்க வேண்டும். 

கிளை அமைத்து போர்டு வைத்துள்ள கிளையின் மூலம் உறுப்பினர் அடையாள அட்டை பெற கட்டணம் எவ்வளவு என்பதை கிளை கூட்டத்தில் நீங்களே முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ( ஒவ்வொரு உறுப்பினரும் கட்டாயம் ஒற்றை ரூபாயாவது செலுத்த வேண்டும் இலவச உறுப்பினர் சேர்க்கை கிடையாது).

உங்களுடன் மாவட்ட ஒன்றிய பொறுப்பிலுள்ள நிர்வாகிகள் தொடர்பு கொண்டு தொடர் வேலைத்திட்டங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வார்கள்.

கிராம ஊராட்சி அளவில் ஊழல் எதிர்ப்பு கிராம வளர்ச்சி கிராம இளைஞர்கள் மத்தியில் சட்ட விழிப்புணர்வு ஆகியவற்றை முதன்மை நோக்கமாக வைத்து ஊழலற்ற உள்ளாட்சி ஆண்டுக்கு ஆயிரம் அடிப்படை சட்ட பயிற்சி பெற்ற இளைஞர்களை உருவாக்குவது ஆகிய செயல்திட்டங்கள் மிக தீவிரமாக செயல்படுத்த உள்ளோம்.

உங்கள் கிராமத்தில் நீங்கள்தான் ஒன்று இணைந்து கூடி முடிவெடுக்க வேண்டும் அதுதான் உண்மையான ஜனநாயகம் என்பதை உறுதி படுத்தும் வகையில் கிராம ஊராட்சி அளவில் பொறுப்பாளர்களையும் உறுப்பினர் கட்டணத்தையும் நீங்களே முடிவு செய்து தலைமைக்கு அனுப்புங்கள்


 *வழிமுறைகள்: 3* 


பத்துக்கு மேற்பட்ட தகவல் மனுக்கள் + பத்துக்கு மேற்பட்ட பொது நலன் சார்ந்த கோரிக்கை *மனுக்கள் அனுப்பி பதில் பெற்றவர்கள்* உறுப்பினர் சேர கட்டணத்தை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். மேற்படி விபரங்களை சாதாரண தபாலில் தலைமை அலுவலகத்திற்கு உறுப்பினர் வடிவத்துடன் அனுப்பி வையுங்கள்.


வழிமுறைகள்: 4


 பயிற்சியில் தேர்ச்சி பெற்று உறுப்பினராக இணைய

பத்து ரூபாய் இயக்கத்தில் தற்காலிகமாக ஒரு பொறுப்பினை ஏற்றுக் கொண்டு குறைந்த பட்சம் ஒரு வேலை திட்டத்தை தலைமை ஒப்புதலுடன் நீங்களாகவே எடுத்து கொன்டு செயல்பட்டு அதில் முன்னேற்ற விபரத்தை தெரிவித்து தேர்ச்சி பெற்று உறுப்பினராக இணைபவர்கள் உறுப்பினர் கட்டணத்தை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். 



பத்து ரூபாய் இயக்க பொறுப்புகளுக்கு கட்டணம் ஏதும் இல்லை கிளை ஒன்றிய மாவட்ட மாநில பொறுப்புகள் எதுவாக இருந்தாலும் கட்டணம் கிடையாது. 




 உறுப்பினர் சேர மாதிரி விண்ணப்ப படிவம்


உங்கள் வியர்வை சிந்திய பணத்தில் மட்டுமே நன்கொடை வழங்க


TEN RUPEE MOVEMENT

SB No: 6906751332

Indian Bank

Rasipuram Branch

IFSC Code: IDIB000R014


Gpay 9445675801 [nalvinai]




அன்புடன்

பத்து ரூபாய் இயக்கம்

(தகவல் - உரிமை - சட்ட ஆர்வாளர்கள் அமைப்பு) 

எண் 7 பழைய பேருந்து நிலையம் இராசிபுரம் 637408 நாமக்கல் மாவட்டம்


மெயில்

tenrupeerti@gmail.com

nalvinai2@gmail.com


முகநூல் பக்கம்

https://www.facebook.com/nalvinai/


முகநூல் குழு

https://www.facebook.com/groups/950737612529569

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக