ஞாயிறு, 31 மார்ச், 2024

அதிமுக நமக்கு எதிாியல்ல. திமுக தான் நமக்கு பிரதான எதிாி.தூத்துக்குடியில் தமாகா வேட்பாளர் எஸ்டிஆர் விஜயசீலன் பரபரப்பு

thoothukudileaks 

31-3-2024

news by sunmugasunthram Reporter 


அதிமுக நமக்கு எதிாியல்ல. திமுக தான் நமக்கு பிரதான எதிாி.

தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றி மோடி பிரதமராவார் தூத்துக்குடியில் தமாகா வேட்பாளர் எஸ்டிஆர் விஜயசீலன் பேசினார்.

     தூத்துக்குடி தேசிய ஜனநாயக கூட்டணி தலைமை தேர்தல் காாியாலயம் எட்டையாபுரம் சாலையில் நடைபெற்ற திறப்பு விழாவிற்கு தெற்கு மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் சித்தாரங்கன் தலைமை வகித்தார். 


அம்மா மக்கள் முன்னேற்றக்கழக மாவட்ட செயலாளர் டேனியல் சாமுவேல், ஐக்கிய ஜனதாதளம் மாவட்ட செயலாளர் குழந்தைபாண்டி, பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சின்னத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

     ஓபிஎஸ் அணி மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஏசாதுரை தேர்தல் காாியாலயத்தை திறந்து வைத்தார்.



 தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் எஸ்டிஆர் விஜயசீலன், பேசுகையில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக நான் போட்டியிடுகிறேன். எனக்கு சைக்கிள் சின்னத்தில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். 

    கனிமொழி எம்.பி 5 ஆண்டுகாலம் எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. பிஜேபி ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 


அதிமுக நமக்கு எதிாியல்ல. திமுக தான் நமக்கு பிரதான எதிாி. போட்டியும் அவர்களுக்கும் நமக்கும் மட்டும் தான். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடித்து 3வது முறையாக மோடி பிரதமராவார். பல்வேறு கிராமங்களில் சென்று மக்களை சந்தித்த போது அனைத்து தரப்பினரும் பிஜேபி கூட்டணிக்கு வாக்களிக்க தயாராகவுள்ளனர். அதை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று பேசினார். 

    பின்னர் சிவன் கோவிலில் சாமி தாிசனம் செய்து தூத்துக்குடி தொகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா, மாநில நிா்வாகிகள் விவேகம் ரமேஷ், உவாி சத்தியசீலன், வக்கீல் சந்தனகுமார், மாவட்ட அணி நிர்வாகிகள் வக்கீல் சண்முகசுந்தரம், வக்கீல் வாாியார், வக்கீல் நாகராஜ், வக்கீல் சுரேஷ்குமார், சுவேதா், உஷாதேவி, வௌ்ளத்தாய், முன்னாள் கவுன்சிலர் லதா, மற்றும் தங்கம்,  ரவீசந்திரன், தமாகா நகர செயலாளர் ரவிக்குமார், தூத்துக்குடி தொகுதி பிஜேபி பொறுப்பாளர் பிரபு உள்பட கூட்டணி கட்சியை சேர்ந்த பலர் உடன் சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக