ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

தூத்துக்குடியில் தந்தை பெரியார் பிறந்த நாள் பேரணிபெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு மற்றும் விடுதலை்சிறுத்தைகள் கலந்து கொண்டனர்

thoothukudileaks 18-9-2023

news by arunan journalist 

தூத்துக்குடியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவையொட்டி நேற்று 17-9-2023 தூத்துக்குடியில் பேரணி நடைபெற்றது.

 இதில் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு மற்றும் விடுதலை்சிறுத்தைகள் கலந்து கொண்டனர் .



இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடியில் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக தந்தை பெரியாரின் 145 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது 



இதையொட்டி கூட்டமைப்பு சார்பாக தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை முன்பிருந்து 

தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் உள்ள பெரியார் சிலை வரை பேரணி நடைபெற்றது. 


பல்வேறுபட்ட ஜனநாயக கட்சிகள், அமைப்புகள் கலந்து கொண்ட பேரணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாகமாவட்ட செயலாளர் இக்பால்  கலந்து கொண்டு முழக்கங்கள் எழுப்பினார்

உடன் ஆட்டோ கணேசன்,

அர்ஜுன்,வேந்தன், மகேந்திரன்,இசக்கி, மாரிமுத்து, பத்மநாபன்,

செல்வகுமார் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.


இவண்

அகமது இக்பால்   

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 

தூத்துக்குடி மாவட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக