திங்கள், 8 மே, 2023

முதல்வர் ஸ்டாலின் சாதனையை வீடுதோறும் கொண்டு சேர்க்க வேண்டும் முடிவைதானேந்தல் பொதுக் கூட்டத்தில் வசந்தம் ஜெயக்குமார்

 thoothukudileaks 9-5-2023

photo news by shanmuga sunthram 

தமிழக முதல்வர் ஸ்டாலின் சாதனையை வீடுதோறும் கொண்டு சேர்க்க வேண்டும்  முடிவைதானேந்தல் பொதுக் கூட்டத்தில் வசந்தம் ஜெயக்குமார் பேசினார்.



      தூத்துக்குடி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தெற்கு மாவட்டம் மேற்கு ஒன்றியம் சார்பில் முடிவைத்தானேந்தல் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு முன்பாக நடைபெற்ற கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர். சுரேஷ், மாவட்ட கவுன்சிலர் செல்வக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வபாரதி, முத்துலட்சுமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் பாலகிருஷ்ணன், வரவேற்புரையாற்றினார்.

     தலைமைக்கழத்தால் அறிவிக்கப்பட்ட மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் வசந்தம் ஜெயக்குமார் பேசுகையில் திமுக ஆட்சி இராண்டு சாதனை நூறாண்டு பேசும் வகையில் அமைந்துள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத காலை உணவு திட்டம் வீடு தேடி கல்வி இல்லம் தேடி மருத்துவம் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், புதுமைப்பெண் கல்வி திட்டத்தில் ரூ1000 உதவித்தொகை என பல சாதனைகளை புரிந்து இந்தியாவிற்கே வழிகாட்டும் முதலமைச்சராக தளபதியார் விளங்குகிறார். தமிழக மக்களின் நலன்களை கட்டிகாக்கும் இந்த அரசை பார்த்து ஆளுநர் ரவி திராவிட மாடல் பற்றி காலாவதியாகிவிட்டது. என்று சனாதனத்தை பற்றி பேசுகிறார். ஒரு குறுகிய வட்டத்திற்குள் வைப்பதை அவர்கள் விரும்புகிறார்கள்.



 அனைவருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். அதற்காக திமுக உழைக்கிறது. இது திராவிட மாடல் 2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும் அதன் மூலம் அடுத்து இந்தியாவை யார் ஆள வேண்டும் என்பதை தமிழக முதலமைச்சர் கை காட்டுபவர் தான் அந்த இருக்கையில் அமருவார். இதற்கு அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்துவோம் திமுகவின் சாதனைகளை வீடுதோறும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். பொதுமக்கள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும். என்று பேசினார். சண்முகையா எம்.எல்.ஏ, ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி உள்பட பலர் பேசினார்கள்.

   கூட்டத்தில் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி, தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, மாவட்ட பிரதிநிதி நாகராஜன், அவைத்தலைவர் மாரியப்பன், துணைச்செயலாளர்கள் ஜெயராஜ், மல்லிகா, பொருளாளர் சின்னராஜா, மாவட்ட பிரதிநிதி வெங்கடலாச மாரியப்பன், கணேசன், கோபால், ஒன்றிய அணி அமைப்பாளர்கள் பரியேறும் பெருமாள், சங்கர், மந்திரம், ஒட்டக்காரன், முத்துலட்சுமி, ஸ்டீபன், முத்துமாரியம்மாள், சுடலைமணி, வசந்த், மாநில பொதுக் குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றியக் கழக, கிளை நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேற்கு ஒன்றிய துணைச்செயலாளர் வக்கீல் நாராயணன் நன்றியுரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக