thoothukudileaks 9-5-2023
photo news by shanmuga sunthram
தமிழ்நாட்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்க 30 ஆயிரம் கோடி முதலமைச்சர் ஓதுக்கியுள்ளார். சண்முகையா எம்.எல்.ஏ தகவல்.
இதுபற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி பாரதிநகர் விலக்கில் நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவரும் ஒன்றிய செயலாளருமான சரவணக்குமார் தலைமை வகித்தார். துணைத்தலைவர் தமிழ்ச்செல்வி, ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தி, அவைத்தலைவர் முருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளைச்செயலாளர் பூசாரி முருகன், வரவேற்புரையாற்றினார்.
ஓட்டப்பிடாரம் சண்முகையா எம்.எல்.ஏ பேசிய தாவது:-
முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற நேரத்தில் கொரனோ பாதிப்பு அதிகம் இருந்தது. அதனால் மக்கள் முடக்கம் தொழில் பாதிப்பு இருந்த நேரத்தில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக கிராமங்களில் உள்ள ஆரம்பசுகாதார நிலையம் வாக்குச்சாவடி என பல முன்னெடுப்பு மூலம் படிப்படியாக குறைந்தது.
அந்த நேரத்திலும் ஒரு குடும்பத்திற்கு நான்காயிரம் உதவித்தொகை வழங்கி ஆவின் பால் ரூ 3 விலை குறைக்கப்பட்டது.
பெண்களுக்கு இலவச பேருந்து அரசு 210 சாதiகைளை தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றியுள்ளது புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ஏழ்மையில் உள்ள மாணவ மாணவிகள் கல்லூரி படிப்பை தொடர்கின்றன,
இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் சர்க்கரை வியாதி பிரஸர், உள்ள முதியவர்களுக்கு பரிசோதனை செய்து அவர்களுக்கு மருந்து மாத்திரை வழங்கப்படுகிறது.
இல்லம் தேடி கல்வி மூலம் மாலை நேர கல்வி வழங்கப்படுகிறது. இந்த பகுதி கல்லூரி அருகிலுள்ள சாலை உள்ளிட்டவைகள் ஓருகோடியே 31லட்சம் அமைக்கப்படவுள்ளது.
விவசாயிகளுக்கு தனிபட்ஜெட், அண்ணாமறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் குடிநீர் மற்றும் சாலை பணிகள் என பல நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சர் 18 மணி நேரம் நாட்டுக்காக உழைக்கிறார்.
அது அவரது சக்திக்கு மீறியதாகும் நமது மொழி என அனைத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகதான். அதே போல் காலை உணவு திட்டத்தின் மூலம் 30 சதவீதம் பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து பேராசிரியர் அன்பழகன் பெயரில் தொடங்கப்பட்ட திட்டத்தின் மூலம் கல்வி நிலையங்கள் புதுப்பித்தல் என பல பணிகள் நடைபெறுகின்றன.
உள்ளாட்சியில் பெண்களுக்கு 33 சதவீதம் என இருந்ததை தளபதி 50 சதவீதமாக உயர்த்தியுள்ளார்.
அதே போல் அரசு பணியும் 30 சதவீதம் என இருந்ததை 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
1989ல் கலைஞர் ஆட்சியில் தொடங்கப்பட்ட மகளிர் சுயஉதவிக்குழுக்கு முதல்வர் ஆட்சியில் கடன் வழங்குவதற்கு 30 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெண்கள் எல்லாத்துறையிலும் முன்னேற்றமடைந்து வருகின்றன. நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல பணிகள் நடைபெறுகின்றன.
எங்களிடம் கொடுக்கும் கோரிக்கை மனுக்களை எம்.பி மற்றும் அமைச்சர் அனிதா ராதகிருஷ்ணன் கவனத்திற்கு எடுத்துச்சென்று படிப்படியாக அதை தீர்த்து வைத்து வருகிறோம் ஓரு கிராமம் வளர்ச்சிக்கு பல கோடிகள் தேவைப்படுகிறது. அதையெல்லாம் நிறைவேற்றுகின்ற நிலையில் மாப்பிள்ளையூரணி ஊராட்சியை தன்னிறைவு பெற்ற பகுதியாக மாற்ற உங்களோடு இணைந்து உழைப்போம். நமக்கு கிடைத்திருக்கின்ற கனிமொழி எம்.பி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார், ஆகியோர் தொடர்ந்து மக்கள் பணி செய்து வருகின்றனர். முதலமைச்சர் கரத்தை வலுப்படுத்த அனைவரும் துணை நிற்க வேண்டும். என்று பேசினார்.
முன்னாள் எம்.எல்.ஏ டேவிட்செல்வின் பேசுகையில் சென்னை மாகானம் என்ற இருந்ததை தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும் என்று விருதுநகரை சேர்ந்த சங்கரலிங்க நாடார் 70 நாட்களுக்கு மேலாக தொடர் உண்ணாவிரதம் இருந்து மறைந்தார். முதலமைச்சராக இருந்த அண்ணா அந்த சட்டத்தை இயற்ற சட்டமன்றத்தில் தாக்கல் செய்த போது அனைவருடைய ஆதரவோடு அப்போது சபாநாயகராக இருந்த ஆதித்தனார் நிறைவேற்றிக் கொடுத்தார்.
இந்த வரலாறு எல்லாம் தெரியாமல் சட்டமன்றத்தில் அரசின் கொள்கைகளை படிக்க சொன்னால் கவர்னர் அங்கு வந்து நின்று பேசுகையில் தமிழ்நாடு என்று வந்த போது அதை பேச மறுக்கிறார். அவர் பேசிய தேவை இல்லாத கருத்துகளை நீக்கி குறிப்பேட்டில் பதிவு செய்தார். இப்போதும் தேவை இல்லாமல் பலவற்றை பேசி குழப்பி வருகிறார் என்று பேசினார். மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் தாமரைபாரதி, உள்ளிட்ட பலர் சிறப்புரையாற்றினார்கள்.
கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் மாடசாமி, ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி, மாவட்ட ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் ராஜேந்திரன், மாணவரணி அமைப்பாளரும் மாவட்ட கவுன்சிலருமான அருண்குமார், மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் ஆரோக்கியமேரி, மாவட்ட பிரதிநிதிகள் தர்மலிங்கம், சப்பாணி முத்து, சிவக்குமார், ஒன்றிய துணைச்செயலாளர்கள் ராமசந்திரன், வசந்தகுமாரி, பொருளாளர் மாரியப்பன், ஒன்றிய கவுன்சிலர்கள் தொம்மை சேவியர், அந்தோணி தனுஷ்பாலன், முத்துமாலை, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஸ்டாலின், துணை அமைப்பாளர்கள் சதீஷ் ஆம்ஸ்ட்ராங், ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் ஜெஸிந்தா, நிர்வாகிகள் ஜோஸ்பின் மேரி, மரிய ஜெய ரூபி, வளர்மதி, சிவபாலா, அங்காளஈஸ்வரி, நூர்ஜஹான் பாலசுந்தரி இசக்கியம்மாள் எபன் சூரி ஈஸ்வரி மாரியம்மாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி காமராஜ் ஜீனத்பீவி பாரதிராஜா பாலம்மாள் தங்கபாண்டி சக்திவேல் பாண்டியம்மாள் உமாமகேஸ்வரி தங்கமாரிமுத்து ஜேசுராஜா பெலிக்ஸ் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிளோமின்ராஜ்,
நிர்வாகிகள் மரியானுஷ் அம்புரோஸ் ராயப்பன் சந்தனராஜ் ஆனந்தகுமார் அழகுசேகர் சுதாகர் கௌதம் குரூஸ் மாரியப்பன் ஜெயசீலன் மைக்கேல்ராஜ் ஜெயசிங் ஆரோக்கியம் சிலுவை மாரிமுத்து மரியதாஸ் ரொசாரி சேவியர் ஆசைத்தம்பி மணி ரவீந்திரகுமார் பெரியமாரிமுத்து கார்த்திக் விக்கி முனியசாமி முருகன் ஆனந்த் குணாபாஸ்கர் தங்கமாரிமுத்து கண்ணன் சோனாராஜன் திமுக கிளைச்செயலாளர்கள் காமராஜ் ஜெபராஜ் ராமசந்திரன் சிவபெருமாள் வடிவேல் சந்தனகுமார் காஜாமைதீன் பாலுநரேன் பாரதிராஜா இசக்கிமுத்து கனி மகாராஜா அன்புரோஸ் சுபாஷ் தங்கபாண்டி பழனி கருப்பசாமி முத்து மாடசாமி என்று முத்துராஜ் பொன்ரத்தினம் திருமணி ஆனந்தராஜ் காசிலிங்கம் பொன்னுச்சாமி இம்மானுவேல் தனபாலன் அந்தோணி பென்சிகர் ஆறுமுகபாண்டி சந்திரசேகர் முத்துக்குமரன் வேல்ராஜ் மாரிமுத்து குருசாமி வெற்றிவேல் கதிர்வேல் துரை சேகர் ஜெயபாண்டி சந்திரசேகர் ரத்தினகுமார் அருண்ஜெகன் சரவணன் பிரபாகர் உத்திரம் பேச்சிமுத்து முருகராஜ் முருகன் ராமமூர்த்தி உலகநாதன் கிராஸ் என்ற ஞானப்பிரகாசம் ஜேசுராஜா நெல்சன் ஜான்சன் நாராயணமூர்த்தி கூட்டணி கட்சியை சேர்ந்த தமிழ்புலிகள் ஆதித்தமிழர் பேரவையை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய துணைச்செயலாளர் கணேசன் நன்றியுரையாற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக