thoothukudileaks 5-5-2023
தமிழகத்தில் நடைபெற்று வரும் விடியா திமுக ஆட்சியில் வணிகர்களுக்கு பாதுகாப்பில்லை. அதிகரித்து வரும் கஞ்சா போதை கலாச்சாரத்தால் வணிகர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை 40வது சுதேசி விழிப்புணர்வு மாநாட்டில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு.
இது பற்றிய செய்தியாவது
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை 40 ஆவது வணிகர் தின விழா சுதேசி விழிப்புணர்வு மாநாட்டிற்கான அழைப்பிதழை கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி அவரிடம் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க மாநிலத் தலைவர் அண்ணாச்சி அ. முத்துக்குமார் மாநில நிர்வாகிகளோடு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் உடன் சென்று மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து மே 5 இன்று தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை 40 வது வணிகர் தின சுதேசி விழிப்புணர்வு மாநாடு சென்னை விஜிபி தங்க கடற்கரை சாலையில் வைத்து தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநில தலைவர் அண்ணாச்சி அ. முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது.
மாநில சங்க நிர்வாகிகள் டி.எஸ்.மைக்கேல்ராஜ், வி.சி.கதிரவன், வி.கணேசன், எம்.எ.தங்கசாமி(எ)திருவேல்முருகன், எஸ்.கே.எம்.சிவக்குமார், சி.ராஜசேகர், ஆர்.காமராஜ், கே.சண்முகம், எஸ்.ஆர்.ரமேஷ், ராஜேஷ்வரிபிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த வணிகர் தின மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு விழாவில் சிறப்புரையாற்றினார்.
வீடியோ பார்க்கஅப்போது அவர் பேசியதாவது....
தற்போது நடைபெற்று வரும் விடியா திமுக ஆட்சியில் வணிகர்களுக்கு பாதுகாப்பு இருக்கா என்றால் இல்லை. தமிழகம் முழுவதும் கஞ்சா போதை வியாபாரம் தான் அதிகரித்து காணப்படுகிறது. கஞ்சா போதை கலாச்சாரத்தால் அதிகம் பாதிக்கப்படுவது வணிகர்கள் தான். காஞ்சிபுரத்தில் கஞ்சா போதையில் உலா வரும் ரவுடிகளால் இந்த கடை காலவரையின்றி மூடப்படுகிறது என ஒரு வணிகர் கடையில் போர்டு எழுதி வைத்து காலவரையற்ற கடையடைப்பு நடத்தியதை சுட்டிக்காட்டி மாநாட்டில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இந்த சுதேசி விழிப்புணர்வு மாநாட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் முன்னாள் மத்திய அமைச்சர் ஜிகே வாசன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன், இந்திய ஜனநாயக கட்சி மாநில தலைவர் இரவி பச்சமுத்து, ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், எஸ்.பி. சண்முகநாதன், வளர்மதி ஆகியோரும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கே.பி. கந்தன், விருகை ரவி, அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் கமலக்கண்ணன், ஆகியோர் சிறப்பித்தனர்.
முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் உடன் விஜிபி மேலாண் இயக்குனர் விஜிபி சந்தோசம், இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூது ஆகியோர் குத்து விளக்கேற்றி கௌரவித்தனர். மாநாட்டில்
நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவன தலைவர் இ.எம். சீனிவாசன் நாடார், அனைத்து அரசியல் கட்சித் தலைவர் ராஜேஸ்வரி பிரியா, ஜாகுவார் தங்கம், டாக்டர் வேலுமணி, நியூஸ்7 வேல்முருகன், முத்து ரமேஷ் நாடார், மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் உயரத்து குடியிருப்பு திருமணவேல், வர்த்தக அணி தலைவர் திருத்துவ சிங், தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஜெ.தனராஜ், புத்தன் தருவை கூட்டுறவு வங்கித் தலைவர் முத்துராமலிங்கம், பாலஜெயம், சாம்ராஜ், பண்டாரவிளை பால்துரை, சுரேஷ் உட்பட்ட பெருந்திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக