thoothukudileaks 28-4-2023
photo news by shanmuga sunthram
தூத்துக்குடியில் ...
திமுக மகளிர் அணி, மகளிர் தொண்டரணி உறுப்பினர் சேர்க்கை கனிமொழி எம்பி உடன் நிர்வாகிகள் நேர்காணல் நிகழ்ச்சி பரபரப்பாக இன்று (28-4-2023 ) நடைபெற்றது.
இது பற்றிய செய்தியாவது:-
திமுக துணைப் பொதுச் செயலாளரும் மகளிர் அணி மகளிர் தொண்டரணி பொறுப்பாளருமான கனிமொழி கருணாநிதி எம்.பி ஒவ்வொருவரிடம் தனித்தனியாக நேர்காணல் நடத்தினார்
தூத்துக்குடி வடக்கு தெற்கு மாவட்டங்களை சேர்நத திமுக மகளிர் அணி, மகளிர் தொண்டரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் உறுப்பினர் சேர்க்கை தூத்துக்குடி கலைஞர் அரங்கில் இன்று 28-4-2023 நடைபெற்றது.
தூத்துக்குடியில் வடக்கு தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி நேர்காணல் போது கனிமொழி எம்.பி, உடன் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதாராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
நேர்காணல் போது கனிமொழி எம்பி..
மகளிர்களுடன் கலந்துரையாடியவர்
தலைவரின் ஆட்சியில் தங்களது உழைப்பும் பங்களிப்பும் கட்சியின் வளர்ச்சி உங்களுடைய பணி குறித்து தெரிவியுங்கள்
அனைத்து மகளிர்கள் மத்தியில் திமுகவில் மகளிர் அணிக்கென்று உறுப்பினர் அடையாள அட்டை எத்தனை பேர் வைத்துள்ளீர்கள்.
அதே போல் சமூக இணையதளம் எத்தனை பேர் பயன்படுத்துகிறீர்கள். அதில் நமது கருத்துக்களை பதிவு செய்கிறீர்கள் என்று கனிமொழி கேள்வி எழுப்பியபோது ...
அதைப் பயன்படுத்துபவர்கள் மகளிர் அணி அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டும் கைகளை உயர்த்தி காட்டினார்கள். அவர்களை ஹெலன் டேவிட்சனிடம் பேசும்படி கூறினார்.
அனைவரும் நல்ல முறையில் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் கனிமொழி எம்பி.
நிகழ்ச்சியில் , மாநில திமுக மகளிரணி செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ஹெலன் டேவிட்சன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, மகளிர் தொண்டரணி செயலாளர் ராணி, மாநில பிரச்சார குழு செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ஜெஸி பொன்ராணி, உள்பட பலர் உடனிருந்தனர்
கூட்டத்தில் துணை மேயர் ஜெனிட்டா, ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் அன்னலட்சுமி, கலைச்செல்வி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரி தங்கம், மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, தெற்கு மாவட்ட துணைச்செயலாளரும் ஊராட்சி மன்ற தலைவருமான சோபியா, தெற்கு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ஆரோக்கிய மேரி, கவுன்சிலர்கள் அதிஷ்டமணி, பவாணி மார்ஷல், சரண்யா, வைதேகி, மெட்டில்டா, ஜெயசீலி, பேபி ஏஞ்சலின், விஜயலட்சுமி, ஜெபஸ்டின் சுதா, சோமசுந்தரி, சுப்புலட்சுமி, மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், மாணவரணி அமைப்பாளர் அருண்குமார், ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியன், சரவணக்குமார், உள்ளிட்ட மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக