thoothukudileaks 25-4-2023
photo news by shanmuga sunthram
தூத்துக்குடி தொகுதி மக்கள் கோரிக்கை நிறைவேற்றிய அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்கள் பாராட்டு.
![]() |
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு வார்டாக சென்று வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து வருகிறார்.
அதை குறிப்பெடுத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட மனுக்கள் மீது புதிய துறை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டு தீர்த்து வைக்கப்படுகின்றன.
அதன்படி 30வது வார்டு 32வது வார்டு பகுதி மக்களிடம் குறைகளை கேட்க சென்ற போது டூவிபுரம் மணிநகர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புதிய பேருந்துநிலையம் அருகிலுள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பணை சங்கத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் வாங்க செல்ல இருப்பதால் தூரம் அதிகமாக இருக்கிறது.
பாலம் ஏறி இறங்குவதால் பல முதியவர்களால் முடியாத நிலை வருகிறது. அதற்கு மாற்று ஏற்பாடு செய்து தரவேண்டும் கோரிக்கை வைத்தனர்.
![]() |
| நியாயவிலை கடை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார். |
இதனையடுத்து டூவிபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஓரு பகுதியில் தனது சொந்த செலவில் அப்பகுதி மக்களுக்காக தற்காலிக நியாயவிலை கடை அமைக்கப்பட்டு ரிப்பன் வெட்டி அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆன்ந்த சேகரன், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ராமகிருஷ்ணன், கவுன்சிலர்கள் அதிஷ்டமணி, கந்தசாமி, கனகராஜ், ஜெயசீலி, பவாணி மார்ஷல், சந்திரபோஸ், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சிவக்குமார் என்ற செல்வின், அருண்சுந்தர், மாவட்ட பிரதிநிதிகள் ராஜ்குமார், மீனாட்சி சுந்தரம், செந்தில்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சிவன்யாதவ், வட்டச்செயலாளர்கள் செந்தில்குமார், முத்துராஜா, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, மதிமுக மாநில கலை இலக்கிய அணி துணைச்செயலாளர் மகாராஜன், முன்னாள் கவுன்சிலர் அந்தோணிராஜ், நிர்வாகிகள் கிளிப் ராஜன், சுப்பையா, மணி, அல்பட், அற்புதராஜ், உணவு பொருள் வழங்கல் தாசில்தார் ஜஸ்டிஸ் செல்லத்துரை, பசுமை பண்ணை காய்கறி அங்காடி மேலாளர் ராஜதுரை, கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் அந்தோணி பட்டுராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். பல்வேறு தரப்பினரின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும். என்று உத்தரவாதம் அளித்தார். அப்போது அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கூறுகையில் எந்த கோரிக்கையாக இருந்தாலும் அதை பெற்றுக்கொண்டு முறையாக செயல்படுத்தி வருகின்றார். அமைச்சர் அது போல் தான் இந்த பகுதியில் ரேஷன்கடை அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்த குறுகிய காலத்திற்குள் அதை நிறைவேற்றி கொடுத்துள்ளார்கள். அதற்கு என்றும் நாங்கள் நன்றி கடன் பட்டவர்களாக இருப்போம் என்று தெரிவித்தனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக