திங்கள், 24 ஏப்ரல், 2023

தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் ரசிகர் மற்றும் அ.இ.அ.தி.மு.க. மூத்த முன்னோடிகளை கெளரவித்து ரூ1 லட்சம் மதிப்பிலானநலத்திட்ட உதவிகள் பெருங்குளம் பேரூராட்சி மன்ற தலைவி டாக்டர்புவனேஸ்வரி சண்முகநாதன் வழங்கல்

thoothukudileaks 24-3-2023

news by arunan 


மாற்றுதிறானாளிக்கு மூன்று சக்கர சைக்கிள் பெருங்குளம் பேரூராட்சி மன்ற தலைவி டாக்டர் புவனேஸ்வரி சண்முகநாதன் வழங்கினார்.


தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் ரசிகர் மற்றும்அ.இ.அ.தி.மு.க. மூத்த முன்னோடிகளை கெளரவித்து ரூ1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பெருங்குளம் பேரூராட்சி மன்ற தலைவி டாக்டர் புவனேஸ்வரி சண்முகநாதன் வழங்கினார்.






இதுபற்றிய செய்தியாவது:-

      தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர்.ரசிகர் மற்றும் அ.இ.அ.தி.மு.க. மூத்த முன்னோடிகளை கௌரவித்து, ரூ 1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பெருங்குளம் பேரூராட்சி மன்ற தலைவி டாக்டர் புவனேஸ்வரி சண்முகநாதன் வழங்கினார்.



       தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர்.ரசிகர் மற்றும் மனிதநேய பண்பாளர் எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் அ.இ.அ.தி.மு.க.மூத்த முன்னோடிகள், எம்.ஜி.ஆர்.ரசிகர்களை கௌரவித்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி கனிஹோட்டல் மீட்டிங் ஹாலில் எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் கே.மிக்கேல் தலைமையில் நேற்று (23-4-2023 )மாலை  நடந்தது.



      பொ.ஜனார்த்தன பாண்டி, மாணிக்கம், அமிர்தராஜ், சந்தனராஜ், குமாரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      விழா குழு ஒருங்கிணைப்பாளர் சத்யா இலட்சுமணன் வரவேற்றார்.

       

விழாவில் அ.இ.அ.தி.மு.க. மூத்த முன்னோடி மற்றும் எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு மூன்றுசக்கர வண்டி, தையல் மிசின், சைக்கிள், குக்கர், ஹாட்பாக்ஸ், புட்டு குழல், பெட்சீட், வேட்டி, சேலை, அரிசி உள்ளிட்ட ரூ1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பெருங்குளம் பேரூராட்சி மன்ற தலைவி டாக்டர் புவனேஸ்வரி சண்முகநாதன் வழங்கினார்.

       மற்றும் விழாவில் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.சுதாகர், அ.இ.அ.தி.மு.க மூத்த முன்னோடிகள் செ.பொன்னம்பலம், ஆத்தூரஆர்.எஸ்.மணிமாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், கே.டி.சி தொழிற்சங்கம் தொப்பை கணபதி, தகவல் தொழில்நுட்ப பிரிவு சகாயராஜ், சோபன், பொன்ராஜ், தாமஸ், நாராயணன், சேவியர்ராஜ், முருகேசன் முருகன், ஆறுமுகம்உட்பட பலர் கலந்துகொண்டனர்.


       மாரியப்பன் நன்றி கூறினார்.

     இதற்கான ஏற்பாடுகளை விழா குழு ஒருங்கிணைப்பாளர் சத்யா இலட்சுமணன், மூத்த முன்னோடி பொன்னம்பலம் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக