செவ்வாய், 31 ஜனவரி, 2023

பொதுமக்கள் அவதி கண்டு கொள்ளுமா? தூத்துக்குடி மாநகராட்சி!!!

 thoothukudileaks 31-1-2023

news by arunan 

தூத்துக்குடி மாநகராட்சி அவலம் சிறு மழைக்கும் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு நடந்து செல்ல முடியவில்லை 14 வது வாா்டு தெருவெங்கும் நீர் குட்டையாக தேங்கி சகதி மண் சாலையாக தான்  இருக்கிறது என வேதனையுடன் தெரிவிக்கிறார்கள் .

சிறு மழைக்கு கூட நீர் தேங்கிடும் காட்சி 

சகதி மண் சாலை 


தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் செயல்பாடுவதாகவும் சாலை வசதிகள் போடுவதாகவும் தெரிவித்துக் வருகின்றனர். 

ஆனால் ?

தூத்துக்குடி மாநகராட்சி 14 வது வாா்டு சின்னகண்ணு புரம் மற்றும்

செல்வ விநாயகர் தெருக்களில் ஒவ்வொரு முறை மழை பெய்யும் பொழுது மழைநீர் தேங்கி பொது மக்களுக்கு இடையூராக உள்ளது .

சகதி காடாய்  மாறியுள்ள மண் சாலை

video பார்க்க 

அப்பகுதிகளில் தார் சாலைகள் மற்றும் பேவர் பிளாக் சாலைகள் அமைக்க  பொதுமக்கள் தூத்துக்குடி மாநகராட்சி ஆனையர் மற்றும் மேயர் ஜெகன் பெரியசாமி இப்பகுதியில் பார்வையிட்டு சரி செய்து தார் சாலைகள் அமைத்து அல்லது சிமெண்ட் சாலை அமைக்க இப்பகுதியில் உள்ள மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார் கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக