தூத்துக்குடி மாவட்டம்: 30.01.2023
தூத்துக்குடி த்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கான ஆய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.
இன்று (30.01.2023) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், சமூக விரோதிகள் மற்றும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பளார் கார்த்திகேயன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி சத்தியராஜ், கோவில்பட்டி துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ்
திருச்செந்தூர் ஆவுடையப்பன், ஸ்ரீவைகுண்டம் மாயவன், மணியாச்சி லோகேஸ்வரன், சாத்தான்குளம் அருள், மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு பொன்னரசு, மாவட்ட குற்ற பிரிவு ஜெயராம், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு சம்பத், மாவட்ட காவல் கட்டுபாட்டு அறை ஆய்வாளர் ரேனியஸ் ஜேசுபாதம், மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு காவல் ஆய்வாளர் ஜெரால்டின் வினு உட்பட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக