புதன், 16 நவம்பர், 2022

கடலில் மீன் பிடிக்கும் போது உயிரிழந்த திரேஸ் புரம் மீனவர் குடும்பத்திற்கு தூத்துக்குடி கனிமொழி எம்பி நேரில் சென்று ஆறுதல் நிவாரண நிதி வழங்கினார்

 தூத்துக்குடி மாவட்டம், திரேஸ்புரத்தை சேர்ந்த செல்வம் என்பவர் கடலில் மீன் பிடிக்கும் போது உயிரிழந்தார்.


கனிமொழி எம்பி ஆறுதல் தெரிவித்தார் 


தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி   இன்று (16/11/2022) புதன்கிழமை, திரேஸ்புரத்தில் உள்ள அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து, நிவாரண நிதி உதவியை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.



இந்நிகழ்ச்சியில் 

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் கழக நிர்வாகிகள்! கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக