தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்தும், மின் கட்டண உயர்வை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியும்,தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
சனிக்கிழமை (23.07.2022) தூத்துக்குடி, 12வாசல் மையவாடி எதிரே உள்ள மைதானத்தில் நடைபெற்றது.
Video
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் காந்தி எம்எல்ஏ பார்வையாளராக கலந்து கொண்டார்.
தமிழக அரசு கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் சத்தியசீலன் மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருக ஆதித்தன் மாநில பொதுக்குழு உறுப்பினர் இசக்கிமுத்துமாவட்ட பொதுச் செயலாளர் டி.ராஜா மாவட்ட துணைத் தலைவர் செல்வராஜ் மாவட்ட துணைத் தலைவர் தங்கம் தேசிய செயற்குழு உறுப்பினர் கனகராஜ் மாநில செயற்குழு உறுப்பினர் பால்ராஜ் மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சந்தனக்குமார மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் முத்துராமலிங்கம்,விருந்தோம்பல் பிரிவு மாநில செயலாளர் பாலமுருகன் மாவட்ட செயலாளர்களான வீரமணி, சங்கர், தென்திருப்பேரை ரேவதி மற்றும் மாவட்ட துணைத் தலைவர் சரஸ்வதி தூத்துக்குடி தெற்கு மண்டல் தலைவர் மாதவன் மற்றும் பல்வேறு அணி பிரிவுகளின் நிர்வாகிகள் மற்றும் மண்டல்களின் நிர்வாகிகள் உட்பட பலரும் கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்,
தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து மின் கட்டணத்தை வாபஸ் பெற வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.!


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக