திங்கள், 9 மே, 2022

ஆயத்தமாகிறார் ? தூத்துக்குடி MP வேட்பாளராக பிஜேபி அண்ணாமலை சூடாகும் அரசியல் பரபரப்பு ?

 ஆயத்தமாகிறார் ? தூத்துக்குடி MP வேட்பாளராக பிஜேபி அண்ணாமலை சூடாகும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



தூத்துக்குடி எம்.பி. தேர்தல் வேட்பாளாராக பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை போடடியிடுகிறார். அதற்கான ஏற்பாடுகளை இப்போதே தூத்துக்குடி மாவட்ட பிஜேபி யினர் செய்து வருகிறார்கள். இதை முன்னிட்டு பிஜேபி மாநில துணை தலைவராக தூத்துக்குடி முன்னாள் மேயர் சசிகலா புஷ்பா வுக்கு பதவிகொடுக்கப்பட்டிருக்கிறது .மேலும் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் பதவியும் தற்போது வழங்கப்பட்டுள்ளது.


விரைவில் 2024-ல் ஆண்டு வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி எம்பி வேட்பாளராக அண்ணாமலை தேர்ந்தெடுத்துள்ளாராம் 

சென்ற தேர்தலில் அரவற்குறிச்சி தொகுதி நின்று என்பது தோல்வியடைந்தார் இதனால் இப்போதே தொகுதியை தேர்ந்து எடுத்து நிற்பதில் கவனம் செலுத்துவதில் உஷாராகி வருகிறார்.


இதனால் தூத்துக்குடி மாவட்ட தொகுதி பற்றி சாதி பலம் மற்றும் மதம் சார்ந்த கள நிலவர விவரங்களை உண்மையை மறைக்காமல் அவருக்கு  வேண்டிய சீனியர்களிடம் கேட்டு இருக்கிறார். 

பிஜேபி ஏன்? தோற்றது கனிமொழி எப்படி ஜெயித்தார் என கேட்டு ரிப்போர்ட் வாங்கியுள்ளாராம். 

அதில் நாம் (பிஜேபி)

ஜெயிக்க முடியுமா என அண்ணாமலை அவரிடம் பேசியவர் பகிர்ந்து கொண்டவர்கள் தெரிவிக்கிறார்கள்.



தற்போது முதல்வர் ஸ்டாலின் தங்கையும் மாநில திமுக மகளிர் தலைவியுமான கனிமொழி MP தூத்துக்குடி மாவட்ட எம்.பி. ஆக இருந்து வருகிறார்.

கடந்த 2019- தேர்தலில் தூத்துக்குடி எம்.பி. தொகுதியில் பிஜேபி மாநில தலைவி தமிழிசை செளந்தராஜன் அவரை எதிர்த்து திமுக சார்பாக கனிமொழி போட்டியிட்டார். இருவருக்கும் கடுமையாக போட்டி தமிழிசை வேட்பாளர் தரப்பினரோ உறுதியாக வெற்றி பெறுவார் என்றிருந்தார்கள்  சாதி - மதம் மற்றும் அதிமுக ஒட்டு வங்கி என நம்பி கொண்டிருந்தார்கள். தாமரை அக்கா. பனங்காட்டு காரி அவர் யார் தெரியுமா? இவ்வூர்காரர் இல்லை என வெளிப்படை காட்டினார். இது பலருக்கும் பிடிக்காமல் போனது

கனிஅக்காவோ தந்தை பெயர் உறவு மட்டுமே குறிப்பிட்டு சாதி - மதம் போன்றவற்றை முன் நிறுத்தவில்லை. ஏன்? போல்பேட்டை பிள்ளையார் கோவில் பூசாரி தீப ஆராதனையோ ? சர்ச் பாதிரியார் இடமோ ஆசீர்வாதம் வாங்க செல்லவில்லை தவிர்த்தார்.


 தூத்துக்குடி மாவட்ட எம்.பி. 6 தொகுதி உள்ளது .அதாவது

 1விளாத்திக்குளம்


2ஒட்டப்பிடாரம்


 3 ஸ்ரீவைகுண்டம்

 

4கோவில்பட்டி

 5திருச்செந்தூர்

6 தூத்துக்குடி 

இந்த 6-ல் ஒவ்வொரு தொகுதியிலும் பல வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் அவர்களே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட எந்த சாதி மதமும் வெற்றியை நிர்ணயிக்க இயலாது என்பதை பிஜேபி- யினர்  மறந்து விட்டார்கள். இதேபோல் முன்னனி அரசியல் கட்சி தேர்வில் நிறுத்தும் வேட்பாளர்  தோல்விகளும் அடக்கம்.


இத்தனைக்கும் திமுக வேட்பாளர் கனிமொழி சாதி மதத்தை ஒரு போதும் முன் நிறுத்தவில்லை ஸ்டெர்லைட் எதிர்ப்பு நிலை தூத்துக்குடி மக்கள் பிரச்சினைகளை முன் நிறுத்திவாக்கு சேகரித்தார்


ஆனால்? பிஜேபி வேட்பாளர் தமிழிசை அவர்களோ ஸ்டெர்லைட் ஆதரவாளர் கெஸ்ட் அவுசில் தங்கியிருந்து தேர்தல் வேலை பார்த்ததும் குறிப்பிடதக்கது.


தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய பகுதியில் தொழிற்சாலை பற்றி  வெகுவாக பேசினார். தூத்துக்குடி கிழக்கு பகுதியில் பிரச்சார வழியில் செல்ல வே முடியாமல் கல் வீச்சு கலாட்டா சம்பவம் இதில் முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஸ்டெர்லைட் ஆலை குறித்து முன்பு பேசியதும் குறிப்பிடதக்கதாக அமைந்தது. இதுவெல்லாம் விட மக்களுக்கு  கடைசி நேர பட்டுவாடா மணி பர்ஸ் திறக்காமல் ஃப்ளாங்கி ? கப்சிப் என இருந்து விட்டார். அதிமுகவுக்கு ரிசல்ட் அப்போதே தெரிந்து விட்டது.


இதில் தூத்துக்குடியில் திமுக உள் குத்து அரசியல் பிரச்சார

பின்னடைவு தங்கள் அதிகாரம் பறிக்கவோ ? மட்டுபடுத்தவோ படலாம் என்ற சுய விரும்பல் உள்ளவர்களால் ... கலக்கத்தில் இன்னும் பரிதவிக்கிறார்கள்.

அப்போது சில பகுதிகளில் வேலை நடை பெற வில்லை என்ற போதிலும் கனிமொழி எம்பி 3 லட்சம் வித்தியாசத்தில் வெற்றி .


ஸ்டெர்லைட் ஆலை வராது என  மக்கள் விரும்பும்  வாக்குறுதி காரணமாக வெற்றி பெற்று இருக்கிரார்.


இப்போதும் தூத்துக்குடி வடக்கு தெற்கு மாவட்ட திமுக விலும் அதே நிலைமை தான் என்றிருக்கிறார்கள். 

எனவே 6 தொகுதிகளிலும் அந்தந்த சாதி மத அமைப்புகளுக்கு தேவையானதை செய்து கொடுக்க திட்டம் தயாராம்.



விரைவில் தூத்துக்குடியில் பிரதமர் மோடி விசிட் நிகழ்ச்சி ஏற்பாடாகி வருகிறதாக தூத்துக்குடி பா.ஜ.க கட்சி தெரிவித்துள்ளர்கள் .இனி தூத்துக்குடி மாவட்டம் அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக