மக்கள் நீதி மய்யம்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவுறுத்தலின் படி ஏப்ரல் 9 சனிக்கிழமை இன்று பெட்ரோல்,டீசல்,சமையல் எரிவாயு மற்றும் சொத்துவரி உயர்வுக்காக மத்திய மாநில அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
தூத்துக்குடியில் காலை 10 மணி அளவில் தூத்துக்குடி பழைய நகராட்சி அலுவலகம் எதிரில் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரும் பெட்ரோல்,டீசல்,சமையல் எரிவாயு மற்றும் சொத்துவரி உயர்வுக்காக மத்திய மாநில அரசைக் கண்டித்து தூத்துக்குடி மத்திய மாவட்டம்
தெற்கு மாவட்டம்
வடக்கு மாவட்டம்
சார்பாக போராட்டம் நடைபெற்றது .
கேஸ் சிலிண்டர் முன்பு தோளில் மண் குடம் ஏந்தி நீர் மாலை சிறுதுளையிட்டு தண்ணிர் சிந்த சுற்றி வந்து மண் குடத்தை உடைத்தார்கள்.
பின்பு பெட்ரோல் இல்லாத ஆட்டோ வாகனத்தை சாலையில் சிறிது தூரம் தள்ளி ெகாண்டு வந்தார்கள். இதனால் .பரபரப்பு ஏற்பட்டது
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளாமானோர் கலந்து கொண்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக