தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி ஊழியர் கூட்டம் பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது அதில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூட்டத்தில் பேசியதாவது:-
எந்த அரசு தடுத்தாலும் ‘விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தே தீரும்’ பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை காரசாரமாக தெரிவித்து இருந்தார்.
அதற்கு பதிலடியாக....?
விநாயகர் சிலை ஊர்வலம்
உங்க மிரட்டல் உருட்டலுக்கு பயப்பட மாட்டோம்..
அமைச்சர் சேகர்பாபு அதிரடியாக பதில் தெரிவித்துள்ளார்.
விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி தரப்படாது.
பாஜகவின் மிரட்டல் உருட்டலுக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதில் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் பண்டிகை கொண்டாட்டங்கள் காரணமாக கொரானா தொற்று அதிகரித்தன. அதேபோல் தமிழ்நாட்டில் நடக்க கூடாது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு விநாயகர் சிலை வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மக்கள்மனித உயிர்கள் தான் முக்கியம். அதை கருத்தில் கொண்டே ஆட்சி நடக்கிறது.
மக்கள் கூட்டமாக கூட கூடாது என்பதால்தான் இந்த கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது.
தடையை மீறி சிலை வைக்கப்படும் என்று கூறுவதை ஏற்க முடியாது. பாஜக விடுக்கும் மிரட்டல் உருட்டலுக்கு எல்லாம் பயப்படும் ஆட்சி இங்கே நடக்கவில்லை, என்று சேகர் பாபு குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக