தூத்துக்குடி லீக்ஸ் : 31-08-2021
நேரம் 5.55 காலை
2021 செப். 1 முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல் கூறியுள்ளார்.
செப்.1 முதல் பள்ளி, கல்லூரி திறக்கப்பட உள்ள நிலையில் இவ் அறிவிப்பு பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பேருந்து பயண அட்டை வழங்கப்படும் வரை சீருடை, பள்ளி அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம்..
அரசு ஐடிஐ, பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக