விநாயகர் சதுர்த்தி விழாவை கட்டுப்பாடுகளுடன் நடத்திட உடனே உத்தரவிட வேண்டும் என தமிழக அரசுக்கு ஹிந்து சேனா தேசிய பேரியக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்துக்களின் பண்டிகைகளில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவானது இந்தியா முழுவதும் உலகமே வியக்கும் வண்ணம் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகினறது.
தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதால் அரசின் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில் தொழிற்சாலைகள் , ஜவுளிகடைகள் , நகைக்கடைகள் , மளிகை கடைகள், ஷாப்பிங் மால்கள் மற்றும் உணவகங்கள் உட்பட பல்வேறு தொழில் நிறுவனங்கள் தற்போது கட்டுப்பாடுகளுடன் இயங்குவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
எனவே எப்போதும் தமிழகத்தில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவை
இந்த ஆண்டும் தகுந்த கட்டுப்பாடுகளுடன் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் நடத்திட தமிழக அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும் என ஒட்டு மொத்த இந்துகளின் சார்பாக ஹிந்து சேனா தேசிய பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக