திங்கள், 2 ஆகஸ்ட், 2021

ஆகஸ்ட் 2021-முதல் ரேஷன் கடையில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றிய தகவல்கள்!!!

ரேஷன் கடையில்  ஆகஸ்ட் 2021-இம்மாதம் முதல் பொருட்கள் வாங்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றிய தகவல்கள்.



1. ஆதார் கார்டு புதுப்பிக்கப்படாமல் சிறு வயதில் பிடித்த ஆதார் கார்டு கைரேகை இருக்கும் பட்சத்தில் ரேஷன் கடையில் கைரேகை விழாது. 


2.கைரேகை விழாமல் ரேஷன் கடை ஊழியர் பொருட்கள் வழங்கப்படமாட்டார். 


3.பெரும்பாலும் 18 வயதுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் ரேஷன் கடைக்கு செல்லுவது நல்லது. 


4.ஒரு குடும்ப அட்டைதாரர்க்கு கைரேகை தவறாக காட்டும் பட்சத்தில் 10 நிமிடங்கள் கழித்துதான் மீண்டும் அந்த அட்டைக்கு பில் போட முடியும்.வீணாக விற்பனையாளரிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும்.


5.சமூக இடைவெளி மற்றும் முககவசம் அணியாமல் வரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கண்டிப்பாக பொருட்கள் வழங்ககூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது 


6.குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படும் தேதி அறிவிப்பு பலகையில் இருக்கும் அதற்கு தகுந்தாற்போல் சிரமமின்றி உங்கள் பொருட்களை பெற்று கொள்ளலாம்.


7.அனைவருக்கும் அனைத்து பொருட்களும் கண்டிப்பாக அந்த மாதம் இறுதிக்குள் கிடைக்கும். 


8.மேற்கூறிய அனைத்து வழிமுறைகளையும் ஆகஸ்ட் மாதம் முதல் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது


9.ஆதார் பதிவு சரியாக இல்லாத பட்சத்தில் விற்பனையாளரால் பில் போட முடியாது அவரிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும்.  


10.கைரேகை பதிவாகாத அட்டைதாரர்கள் சேவைமையத்தில் ஆதார் புதிய கைரேகை பதிவு செய்யவும்.





 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக