வியாழன், 28 மே, 2020

சட்டவிரோதமான மணல் திருட்டை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.!!!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் கோரிக்கை.!!!
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் தாலுகா மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ்நாட்டுக்குறிச்சி கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. அரசுத்துறையின் மணல் அள்ளுவது தொடர்பான எவ்வித அனுமதியுமின்றி  இயந்திரங்கள் மூலம் கனரக லாரிகளில்  திருட்டுத்தனமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது.
ஏற்கனவே எட்டையபுரம் தாலுகா ஐயன்ராஜாபட்டி கிராமத்தில் திருட்டுத்தனமாக மணல் அள்ளி வந்த நபர்கள் அங்குள்ள மக்களின் எதிர்ப்புகளுக்கு பிறகு தற்போது மேற்படி கீழ்நாட்டுக்குறிச்சி கிராமத்தில் சட்டவிரோதமான மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்    
 மணல் திருட்டை தடுக்க வேண்டிய காவல் துறை மற்றும் வருவாய் துறையினர் இது போன்ற மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் இருப்பது  கண்டனத்திற்குரியது 
 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடி நடவடிக்கை எடுத்து மனல் திருட்டை தடுத்திட வேண்டுகிறோம் 
இவண்.*பெ.சந்தனசேகர்.*மாவட்ட செயலாளர்AIYF தூத்துக்குடி மாவட்ட குழு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக