சனி, 16 மே, 2020

தமிழக முதல்வருக்கு அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் கோரிக்கை!!! :

 உலகத்தையே தற்போது அச்சுறுத்தி கொண்டிருக்கும்    கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மிக சிறப்பாக எடுத்து வருகின்ற மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி தமிழகத்தில் ஐயா தங்களின் தலைமையிலான தமிழக அரசு மிகவும் சிறப்பாக அனைத்துவித நடவடிக்கைகளும் சிறப்பாக எடுத்து வருகிறது.

ஆனால் தற்போது முன்பு இருந்த நிலையை விட காட்டுத்தீயை போல் கொரோனா வைரஸ்  பரவி வருகின்ற இந்த நேரத்தில்  ஊரடங்கு உத்தரவில் பல தளர்வுகளை அரசு அறிவித்து நடைமுறையில் இருப்பதால் மக்கள் முககவசம் அணியாமலும் , சமூக இடைவெளியினை கடைபிடிக்காமலும் , அங்கங்கே கூட்டமாகவும் சென்று வருகின்றனர்.

இதனால் கொரோனா தொற்று மிக அதிகமான அளவில் விரைவில் பரவி அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட அதிகமான வாய்ப்பு உள்ளதால் கடைகளுக்கு கடுமையான கட்டுபாடுகளை விதித்து திறந்திருக்கும் நேரத்தை குறைத்திடவும் , பேருந்துகள் வழியாக வேலைக்கு சென்று வந்த மக்கள் தற்போது  வேலைக்கு செல்ல முடியாமல் வருமானம் இல்லாமல்  மிகவும் சிரமப்பட்டு வீட்டிலேயே முடங்கி வாழ்ந்து வருவதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு தங்களின் தலைமையிலான அரசு  ரூபாய்2000 யினை பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டுமெனவும் , வெளிமாநிலங்களில் இருந்து வேறு வேறு பாதைகளில் அரசின்  தடையினை மீறி பலர்  வாகனங்களில்  வருபவர்களால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக அதிகமாக பரவுவதால் மாநில மற்றும் அனைத்து  மாவட்ட எல்லைகளையும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மருத்துவக் குழுக்களுடன்  உடனே ஏற்படுத்திட வேண்டுமெனவும்   மக்களின் முதல்வராகிய தங்களை பொதுமக்களின் நலன் கருதி வணங்கி வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக