வெள்ளி, 29 மே, 2020

தமிழக அரசு ஜீன் மாதம் வழங்கும் விலையில்லா பொருட்களுடன்.... பொதுமக்களுக்கு 1000 ரூபாய் வழங்க வேண்டும்..? இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்க தலைவர் கோரிக்கை!!!!

தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவை மக்களின் நலன் கருதி  மேலும் 1மாதத்திற்கு ஜீன் 30 வரை நீட்டிப்பு செய்திடவும் , சென்னை மற்றும் குறிப்பிட்ட பல  மாவட்டங்களில் கொரோனா வைரஸ் காட்டுத்தீயை விட மிக அதிகமாக பரவி வருவதால் அந்த மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுபாட்டில் கொண்டுவர எந்தவித தளர்வுகளும் இல்லாமல் முற்றிலும் கடுமையான ஊரடங்கை கட்டாயம்  அமல்படுத்த வேண்டும்.

ஊரடங்கு உத்தரவில் பல தளர்வுகளை அரசு அறிவித்து நடைமுறையில் இருப்பதால் மக்கள் முககவசம் அணியாமல் , சமூக இடைவெளியினை கடைபிடிக்காததாலும் அங்கங்கே கூட்டமாகவும் சென்று வருகின்றதால் கொரோனா வைரஸ் தொற்று மிக அதிகமான அளவில் விரைவில் பரவிட அதிகமான வாய்ப்பு உள்ளதால் கட்டாயம் முககவசம் அணிந்து சமூக இடைவெளியினை கடைப்பிடித்திட கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திடவும் ....

மேலும் தொழிற்சாலைகள் சிறிய , பெரிய கடைகள் என அனைத்திலும் அனைத்துவித  பாதுகாப்பு ஏற்பாடுகளும் கட்டாயம் ஏற்படுத்தி அதனை தொடர்ந்து நடைமுறைப்படுத்திடவும் ....



 தினந்தோறும் அரசின் பேருந்துகள் வழியாக வேலைக்கு சென்று வந்த மக்கள் தற்போது பேருந்துகள் இயங்காததால் வேலைக்கு செல்ல முடியாமல் வருமானம் இல்லாமல்
  மிகவும் சிரமப்பட்டு வீட்டிலேயே முடங்கி  வருவதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஜீன் மாதம் வழங்கும் அரசின் விலையில்லா பொருட்களுடன் சேர்த்து ரூபாய்1000~யினை பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டுமெனவும்  தமிழக அரசை வணங்கி வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக