வியாழன், 23 ஏப்ரல், 2020

காயல்பட்டினம்- தூத்துக்குடியில் மூன்று வேளையும் பொதுமக்களுக்கு இலவச சாப்பாடு !!!அம்மா உணவகத்தில் அதிமுக கட்சி ஏற்பாடு!!!

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.  இந்நிலையில் அதிமுக சார்பில் அம்மா உணவகங்கள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கிட அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி -மாண்புமிகு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உத்தரவிட்டனர். 

மேலும், அதற்கான செலவை அ.இ.அதிமுக ஏற்பதாக தெரிவித்தனர். அதனடிப்படையில் இன்று(23.04.2020) தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில்  தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் இயங்கும் அம்மா உணவகங்களில் காலை 7.00 மணிக்கு அதிமுக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இலவசமாக காலை உணவு வினியோகம் செய்து துவங்கி வைத்தனர். 

அதனடிப்படையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாயிலில் உள்ள அம்மா உணவகத்தில் ....
அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பி.ஏ.ஆறுமுகநயினார் தலைமையேற்று துவங்கி வைத்தார். மாநகராட்சி மண்டல உதவி ஆணையர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். அதேபோல்
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள அம்மா உணவகத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா.சுதாகர் பொது மக்களுக்கு உணவு வழங்கி துவங்கி வைத்தார். தூத்துக்குடி 1ம் கேட் சத்திரம் தெருவில் உள்ள அம்மா உணவகத்தில் மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் வக்கீல் முள்ளக்காடு செல்வக்குமார், ஜார்ஜ் ரோட்டில் உள்ள அம்மா உணவகத்தில் முன்னாள் பெரு நகர செயலாளர் ஏசாதுரை, ஸ்டேட் பாங்க் காலனி மண்டல அலுவலகம் முன்பு உள்ள அம்மா உணவகத்தில் பகுதி கழக செயலாளர் பொன்ராஜ், முத்தையாபுரம் எம்.சவேரியார் புரத்தில் உள்ள அம்மா உணவகத்தில் பகுதி செயலாளர் பி.என்.ராமகிருஷ்ணன்,
தூத்துக்குடி விவிடி பூங்கா வாட்டர் டேங்க் அருகில் உள்ள அம்மா உணவகத்தில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் முன்னாள் மாமன்ற உறுப்பினர் வக்கீல் வீரபாகு, குரூஸ்புரம் அம்மா உணவகத்தில் முன்னாள் மாமன்ற உறுப்பினர் பிச்சையா ஆகியோர் தலைமையில் பொதுமக்களுக்கு இலவசமாக காலை உணவு விநியோகிக்கப்பட்டது.

இந்நிகழ்வுகளில் கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக் ராஜா, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட மகளிரணி செயலாளர் குருத்தாய், தலைமை கழக பேச்சாளர் எஸ்.டி.கருணாநிதி மாவட்டச் செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏவின் நேர்முக உதவியாளர்கள் பாலஜெயம், சாம்ராஜ், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய துணைத் தலைவர் தனராஜ், மாநகர மேற்குபகுதி அவைத்தலைவர் சந்தனம், அதிமுக பிரமுகர்கள் திருச்சிற்றம்பலம், கே.ஜே.பிரபாகர், மாவட்ட பிரதிநிதி வக்கீல் முனியசாமி, வட்டக் கழக செயலாளர்கள் சுடலைமணி, வி.வி.பெருமாள், முரளி, அந்தோணிராஜ், ஈஸ்வரன், ஜெகதீசன், சுயம்பு, வட்டக் கழக பிரதிநிதிகள் கேடிசி‌.ஆறுமுகம், வீரக்கோன், கொம்பையா, ஆட்டோ ஜெயராமன், பொன்னுதுரை, ஜெயபால் காமாட்சி, அசோகன், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் சந்தனபட்டு, சந்திரா பொன்ராஜ், மற்றும் ராஜேந்திரன், சந்திரன், முன்னாள் வட்டச் செயலாளர் எஸ்.கே.முருகன், பிஜேபி.சுரேஷ், அந்தோணி சேவியர், மணிகண்டன், பாபு, மகாராஜா, அஜித் அந்தோணி, விஜய் மகளிர்கள் விஜயா,இந்திரா,ஷாலினி, அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு லட்சுமணன், சுந்தரேஸ்வரன், பரிபூரணராஜா, சகாயராஜா, பில்லா விக்னேஷ், வக்கீல் சரவணபெருமாள் உட்பட பலர் இருந்தனர். இதற்கான ஏற்பாட்டினை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ ஏற்பாட்டில் மாநகராட்சி நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் ஐஏஎஸ் அவர்களின் உத்தரவுப்படி மாநகராட்சிப் பொறியாளர் சரவணன், மண்டல உதவி ஆணையர்கள் சந்திரமோகன், தனசிங், காந்திமதி, ராமச்சந்திரன், தரக்கட்டுப்பாட்டு அலுவலர் பிரின்ஸ் ராஜேந்திரன் ஆகியோர் அம்மா உணவகங்களில் ஆய்வுசெய்து கண்காணித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக