தூத்துக்குடி குரூஸ்புரம் ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோவில் தசரா ஏழாம்நாளான வடபாகம் காவல் நிலைய மண்டகப்படி திருவிழா!!!
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன்இ.கா.ப அவர்கள் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது
போலீஸ் பொதுமக்கள் நல்லுறவை பலப்படுத்தும் வகையில் சுமார் 30வருடங்களுக்கு மேலாக ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் ஸ்ரீ சந்தனமாரியம்மன்கோவில் தசரா திருவிழா ஏழாம் நாள் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையமண்டகப்படி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது
அதே போன்று இந்த ஆண்டும் ஏழாம் நாள் திருவிழாவான நேற்று இரவுநிலைய மண்டகப்படி திருவிழா ஸ்ரீ சந்தன மாரியம்மனுக்குவடபாகம்காவல் நிலையம் சார்பில்விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை.(05.10.2019) அன்றுநடைபெற்றது.
இதில் தூத்துக்குடி.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் அவர்களுக்கு பரிவெட்டம் கட்டி முதல் மரியாதை வழங்கப்பட்டது
அதன் பின் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது, இதைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.பஅவர்கள் துவக்கி வைத்தார்
இவ்விழாவில் தூத்துக்குடி நகர துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ்வடபாகம் காவல் ஆய்வாளர் திரு. அருள், மத்தியபாகம் காவல் ஆய்வாளர் திருஜெயப்பிரகாஷ், உதவி ஆய்வாளர் ரவிக்குமார், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர்பேச்சிமுத்து, போக்குவரத்துப்பிரிவு உதவி ஆய்வாளர்கள்வெங்கடேஷ்சிவக்குமார், மற்றும் காவல்துறையினர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக