புதன், 25 செப்டம்பர், 2019

தூத்துக்குடி மாவட்டத்தில்போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப. அவர்கள் 


உத்தரவின் பேரில் ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கலைக்கதிரவன் அவர்கள் மேற்பார்வையில் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு  ஆலோசனைக் கூட்டம் முறப்பநாடு காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. பார்த்திபன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

(24.09.2019) தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் திரு. பார்த்திபன் அவர்கள் தலைமையில்  வல்லநாடு பாறைக்காடு கிராமத்தைச் சேர்ந்த  பசும்பொன் தேசிய கழகம் தெற்கு மாவட்ட செயலாளர் திரு. மாரிமுத்து மற்றும் தேவேந்திரகுல சமுதாயத்தை சேர்ந்த  திரு.மணி ஆகியோர் முன்னிலையில் தலா 10 பேர் வீதம் கலந்துகொண்ட நல்லுறவு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது*

இக்கூட்டத்தில் ஊர் மக்கள் அனைவரும் ஜாதி மத பேதமின்றி ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் எனவும் .எந்த ஒரு சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும் உடனடியாக காவல் நிலையத்திற்கு அல்லது காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும்,*

இளைய சமுதாயத்தை நல்வழிப்படுத்துவோம் எனவும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் பற்றி காவல்துறைக்கு தகவல் கொடுக்குமாறும், வெளியூர்களில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு இங்கு வருவோருக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடாது எனவும்,

சந்தேகப்படும் வகையில் யாராவது அந்நிய நபர் கிராமத்திற்குள் வந்தால் அவர்களை பற்றிய தகவல்களை காவல்நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும் எனவும்,*

யாரும் போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கத்துக்கு அடிமையாக கூடாது எனவும், போதைப்பொருள் குறித்து ஏதேனும் தெரிந்தால் தகவல் தெரிவிக்குமாறும்,*

 கிராமத்தில் நடைபெறும் விழாக்களுக்கு எங்களை அழைத்தால் அதில் கட்டாயமாக நாங்கள் கலந்துகொள்வோம் எனவும், இனி உயிர் இழப்பு என்பது இருக்க கூடாது எனவும்,*

அனைவரும் காவல் நிலையம் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்களை வைத்துக் கொள்ளுமாறும் பிரச்சினைகள் ஏற்படும்போது உடனடியாக தொடர்பு கொள்ளுமாறும் முறப்பநாடு காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. பார்த்திபன் இரு பிரிவினரையும் கேட்டுக்கொண்டார். அனைவரும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக உத்தரவாதம் அளித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக