செவ்வாய், 24 செப்டம்பர், 2019

சட்டப்பேரவை இடைத்தேர்தல் - 2019 விக்கிரவாண்டி தொகுதி கழகவேட்பாளர்தலைவர் மு.க, ஸ்டாலின் அறிவிப்பு!!!

சட்டப்பேரவை இடைத்தேர்தல் - 2019
விக்கிரவாண்டி தொகுதி கழகவேட்பாளர்தலைவர் மு.க, ஸ்டாலின் அறிவிப்பு!!!
திமுக வேட்பாளர் நா.புகழேந்தி

வருகிற 21.10.2019
அன்று நடைபெற இருக்கும்
விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், தோழமைக்
கட்சிகளின் ஆதரவு பெற்ற தி.மு.க. வேட்பாளராக
 திரு. நா.புகழேந்தி அவர்கள்
போட்டியிடுவார் என திமுக தலைவர் மு.ஸ்டாலின் அவர்கள்
அறிவித்தார்.



விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் திரு. புகழேந்தி –
பற்றிய குறிப்புகள்:

கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில், விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொருளாளர் திரு. புகழேந்தி (66) அவர்களை வேட்பாளராக அறிவித்துள்ளார்.

மூன்று முறை விக்கிரவாண்டி ஒன்றிய திமுக செயலாளராக பணியாற்றியுள்ள திரு. புகழேந்தி, 1973 முதல் திமுகவின் தீவிர தொண்டராக சிறப்புற செயல்பட்டவர்.

கலந்து கொண்ட போராட்டங்கள்‌

1987

இந்தித் திணிப்பை எதிர்த்து சட்ட நகல்‌ எரிப்புப் போராட்டத்தில்‌
பங்கேற்று கைதாகி கடலூர்‌ சிறையில்‌ அடைக்கப்பட்டார்.

1991

திமுக ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்கள் கொண்டுவரப்பட்ட இலவச மின்சாரம்‌ வழங்கும் திட்டத்தை மறைந்த முன்னாள் அமைச்சர் ஜெயலலிதா ரத்து செய்தபோது, விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர்‌ முனைவர்‌ க.பொன்முடி அவர்கள் தலைமையில்‌ நடைபெற்ற கட்டை வண்டிப் போராட்டத்தில்‌ பங்கேற்று கைதாகி கடலூர்‌ சிறையில்‌ அடைக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து, விழுப்புரத்தில்‌ நடைபற்ற பொதுக்கூட்டத்தில்‌ தலைவர்‌ கலைஞர்‌ அவர்களால்‌ பொன்னாடை அணிவித்துப் பாராட்டுப் பெற்றார்.

2003

ராணிமேரி கல்லூரியை இடிக்கக்கூடாது என போராடிய கழக தலைவர்‌ தளபதி கைது செய்யப்பட்டதை கண்டித்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி ஒரு மாத சிறைத்தண்டனை பெற்றார்.

மேலும்‌ கழகம்‌ அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்றவர்.

அரசு பதவிகள்‌

1986 ல்‌ ஊராட்சி மன்ற தலைவர்‌ - அத்தியூர் திருவாதி.

1989 ல்‌ கண்டமானடி தொடக்க கூட்டுறவு வங்கியின் தலைவர்‌.

1996 ல்‌ ஒன்றிய பெருந்தலைவர்‌ - கோலியனூர்‌ ஒன்றியம்‌.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக