செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

மீண்டும் பிரபல தாத்தாக்களின் கோஷ்டி மோதலா? தூத்துக்குடி யில் வீடு புகுந்து வெட்டி கொலை?

தூத்துக்குடியில் வீடு புகுந்து இளைஞர் வெட்டி கொலை!!!



தூத்துக்குடி கேவிகே நகரை சேர்ந்தவர் வெள்ளப்பாண்டி என்பவரது மகன் சரவணன் (35). இவருக்கு கார்த்திகா என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.


 இவர் மீது ஏற்கனவே 3 கொலை வழக்கு உள்ளதாகவும் அந்த வழக்கில் அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.


இன்று 27-08-2019  மாலை சுமார் 4.30 மணியளவில் திடீரென அத்துமீறி சரவணன் வீட்டிற்குள் புகுந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடியது. இதனால் சரவணனின் மனைவியும் மற்றும் அப்பகுதி மக்களும் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் டவுன் டிஎஸ்பி பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். இறந்தவர் உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


 கொலை குறித்து வழக்குப்பதிந்து மத்தியபாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Next
தூத்துக்குடி யில்ஆரோக்கியபுரம் பிரபலம் செல்வராஜ் Vs பட்டு ராஜ் 
மோதல்  நடந்தேறியது .1990 -களில் தொடர் கொலை சம்பவம்  இவ்வழக்குகளில் தொடர்புஉடைய  இவ்விரு வரின் ஆதரவாளர்கள் கொலை செய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடதக்கது என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக