சனி, 31 ஆகஸ்ட், 2019

தூத்துக்குடியில் மனைவியை மிரட்டிய.. கணவர் கைது!!!

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் பகுதியான ...

தூத்துக்குடி லயன்ஸ் டவுன் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்(49), இவரது மனைவி அனன்சி(40) இவர்களுக்கு கடந்த 19 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. சுரேஷ் அடிக்கடி மது அருந்தி அனன்சியிடம் தகராறு செய்துவந்துள்ளார். இதன்காரணமாக அனன்சி கடந்த 15 வருடமாக கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் 29.08.2019 அன்று லயன்ஸ்டோன் பகுதியில் உள்ள அனன்சியின் டெய்லர் கடைக்கு முன்பு வைத்து சுரேஷ், அனன்சியிடம் தவறாக பேசி தகராறு செய்து மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து அனன்சி அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ஹென்சன் பால்ராஜ் Cr. No. 551/19  u/s 294(b), 506(ii) IPC இன் கீழ் வழக்கு பதிவு செய்து சுரேசை கைது செய்தார்.

Next....
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம். பகுதியில்
 வடக்கு வாணியன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜேக்கப்(51). இவர் தூத்துக்குடி, முத்துகிருஷ்ணாபுரம் டாஸ்மாக் பாரில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது தூத்துக்குடி, சுந்தரவேல்புரம் 3வது தெருவைச் சேர்ந்த சாமுவேல்(53) என்பவர் ஜேக்கப்பிடம் லாட்டரி டிக்கெட்டுகள் வாங்குவதற்காக பணம் கேட்டுள்ளார்.

இதற்கு ஜேக்கப் மறுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் சாமுவேல் மற்றும் தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கண்ணன்(40) ஆகிய இருவரும் சேர்ந்து ஜேக்கப்பிடம் தகராறு செய்து மிரட்டல் விடுத்துள்ளனர்.*


இதுகுறித்து ஜேக்கப் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு. ரவி குமார் Cr.no 349/19 U/s 294(b), 506(ii) IPCன் கீழ் வழக்கு பதிவு செய்து சாமுவேல் மற்றும் கண்ணன் ஆகிய இருவரையும் கைது செய்தார்.


Next ...
*தூத்துக்குடி மாவட்டம் : இன்று 31.08.2019

*சாத்தான்குளம் காவல் நிலையம்.*

சாத்தான்குளம், ஆனந்தபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பிரவின் மனுவேல்@பிரவீன்(22). அதே பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட்(45).*

*ஆல்பர்ட் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதில் பிரவீன் மனுவேல் @ பிரவீன் சாட்சியாக உள்ளார்.

இந்நிலையில் 29.08.2019 அன்று பிரவீன் மனுவேல் @ பிரவீன் ஆனந்தபுரம் பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்த போது அவரை வழிமறித்த ஆல்பர்ட், பிரவீன் மனுவேல் @ பிரவீனிடம் தகராறு செய்து ரூபாய் 5000 பணம் பறிக்க முயற்சித்துள்ளார்.*

 இதற்கு பிரவீன் மனுவேல் என்ற பிரவீன் மறுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் ஆல்பர்ட், இரும்பு கம்பியால் பிரவீன் மனுவேல் @ பிரவீனை தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார்.*

*இதுகுறித்து பிரவீன் மனுவேல் @ பிரவீன் அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. பாலகிருஷ்ணன் Cr.no 180/19 U/s 294(b), 387, 324, 506(ii) IPCன் கீழ் வழக்கு பதிவு செய்து ஆல்பர்ட்டை கைது செய்தார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக