செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

தூத்துக்குடியில் புரட்சித்தலைவி ஜெயலலிதா 78வது பிறந்தநாள் விழா ஒபிஎஸ் அணி மா செ ஏசாதுரை தலைமையில் சார்பில் உற்சாகக் கொண்டாட்டம்

Tamil Nadu updates, photo news by Arunan journalist 

தூத்துக்குடி: பெ 24

தமிழக முன்னாள் முதல்வர் புரட்சி தலைவி ஜெயலலிதா 78வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, முன்னாள் முதல்வர் O. Panneerselvam  ஆணையின்படி, தூத்துக்குடி மாநகர் மாவட்டம் சார்பில் சிறப்பான விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ். ஏசாதுரை தலைமையில், மாநகர் மாவட்ட கழகம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மாண்புமிகு ஜெயலலிதா  திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், மதிய உணவாக பிரியாணியும் வழங்கி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி லீக்ஸ்


அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி சத்திரம் பஸ் ஸ்டாப் அருகில் அமைந்துள்ள தமிழக முதல்வர் புரட்சி தலைவர் M. G. Ramachandran திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அங்கும் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.

இவ்விழாவில் மாவட்டக் கழக இணை செயலாளர் உமா கண்ணன் (முன்னாள் மாமன்ற உறுப்பினர்), மாவட்டக் கழக துணைச் செயலாளர் பழனிச்சாமி பாண்டியன் (பட்டுகனி), கழக செயற்குழு உறுப்பினர் ஸ்ரீவைசந்திரா, வடக்கு பகுதி கழக செயலாளர் பொய்யாமொழி, மேற்கு பகுதி கழக செயலாளர் கே.எஸ். செல்லத்துரை, தெற்கு பகுதி கழக செயலாளர் அத்தி வெள்ளப்பாண்டி, மத்திய தெற்கு பகுதி கழகச் செயலாளர் வி.பி. முத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், கருங்குளம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வழக்கறிஞர் குருசாமி, ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தருவை அந்தோணி ஜெபராஜ், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி கழக செயலாளர் இரா.இல. ஜெயராமன், மாவட்ட கலை பிரிவு செயலாளர் மற்றும் வட்டக் கழக செயலாளர் ஜெயபால், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தர்மசீலன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் முத்துப்பட்டன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சுதாகர், மாவட்ட அம்மா பேரவை தலைவர் ஆறுமுகத்துரை, மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் மாரியப்பன் ஆகியோரும் பங்கேற்றனர்.

அத்துடன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்கள் கமலக்கண்ணன் (முன்னாள் மாமன்ற உறுப்பினர்), பிளம்பர் இசக்கிமுத்து, ராமகிருஷ்ணன், துபாஷ் பட்டி வைரவன், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் சுசீந்திரன், மாவட்ட பாசறை தலைவர் மகாராஜன், மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் முத்துமாலை, கருங்குளம் வடக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ஐயப்பன், வட்டக் கழக செயலாளர் செல்வகுமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் அப்துல்லா ஹசன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் சபிக்குமார் மற்றும் சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வு முழுவதும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாகக் கலந்து கொண்டு சிறப்பாகக் கொண்டாடினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக