Tamil Nadu updates, photo news by sunmugasuthram press club president
தூத்துக்குடி, ஜூலை 1:
வரும் ஜூலை 7ஆம் தேதி நடைபெற உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, தூய்மை பணிகளை மேற்கொள்ள தூத்துக்குடி மாநகராட்சியிலிருந்து 50 தூய்மை பணியாளர்கள் திருச்செந்தூர் நோக்கி அனுப்பப்பட்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால், இணை ஆணையர் சரவணகுமார், நகர்நல அலுவலர் சரோஜா, சுகாதார ஆய்வாளர்கள் நெடுமாறன், கண்ணன், ராஜபாண்டி, மாநகராட்சி சுகாதார குழுத் தலைவர் சுரேஷ்குமார், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர் மற்றும் பிற அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மேயர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவில் தமிழகமெங்கும் மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்து ஏறத்தாழ 2 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில், கனிமொழி எம்.பி, அமைச்சர் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நேரடியாக கண்காணிக்கின்றனர்."
தூத்துக்குடி மாநகராட்சி பணியாளர்கள், திருச்செந்தூர் நகராட்சி தூய்மை பணியாளர்களுடன் இணைந்து, விழா நடைபெறும் 10ம் தேதி வரை முழுநேர சுகாதார பணியில் ஈடுபட உள்ளனர்.
அவர்களுக்கான தங்கும் வசதிகள், உணவு உள்ளிட்ட அடிப்படை ஏற்பாடுகள் நகராட்சி மூலம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், முத்தையாபுரம் உப்பாற்று ஓடை அருகே பக்தர்களுக்கான தங்குமிட பூங்காக்கள் நகராட்சி சார்பில் முன்னமே அமைக்கப்பட்டு செயல்படுகின்றன.
பக்தர்கள் அவற்றைப் பயன்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்யப்படுகிறது.
விழா நாள்களில் வாகன போக்குவரத்து பாதிக்கப்படாமல் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதாகவும் மேயர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக