செவ்வாய், 3 ஜூன், 2025

எழுமாறும் மனிதநேயம் – பெற்றோர்களில்லாத குழந்தைகளுக்கு கல்வி உதவி வழங்கிய தமிழக வெற்றிக் கழகதூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் M.Sc., B.Ed.,



தூத்துக்குடி, ஜூன் 3:

தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி காமராஜ் நகரைச் சேர்ந்த J.சந்தோஷ் (4ஆம் வகுப்பு) மற்றும் J.நேகா ஸ்ரீ (3ஆம் வகுப்பு) என்ற இரண்டு சிறார் பெற்றோர்களில்லாமல் ஏழ்மை நிலையில் தவித்து வருகின்றனர். இவர்களது உறவினர்கள் வழியாக நிலவிய அவலமான சூழ்நிலை மீது தங்களது கவனத்தை செலுத்திய தமிழக வெற்றிக் கழகம் சமூகப் பணியில் முனைந்து உதவி செய்துள்ளது.



இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்  அஜிதா ஆக்னல் M.Sc., B.Ed.,  அந்தக் குழந்தைகளை நேரில் சந்தித்து, அவர்கள் இருவரின் முழு கல்விச் செலவுகளை தானே ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தார்.

மேலும், பள்ளிச் சீருடை, பைகளும், நோட்புக்குகள் போன்ற அனைத்து கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டதுடன், குழந்தைகள் வாழும் குடும்பச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகைச் சாமான்கள் அடங்கிய உதவித் தொகுப்பையும் வழங்கினார்.

இந்நிகழ்வில் அப்பகுதி மக்கள் மற்றும் குழந்தைகளின் உறவினர்கள் திருப்தியுடன் வரவேற்றனர். “சமூக ஒற்றுமையும், கல்வி வளர்ச்சியும் இணைந்து பயணிக்க வேண்டும்” என்ற உயர்ந்த நோக்கத்துடன் நிகழ்த்தப்பட்ட இந்த செயல், பலருக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக