செவ்வாய், 10 ஜூன், 2025

திரைப்பட கலைஞர்கள் சங்க செயற்குழு கூட்டம் – நிர்வாக சீரமைப்பில் முக்கிய ஆலோசனை

தூத்துக்குடி லீக்ஸ் – 10.06.2025


🗞️ திரைப்பட கலைஞர்கள் சங்க செயற்குழு கூட்டம் – நிர்வாக சீரமைப்பில் முக்கிய ஆலோசனை

தூத்துக்குடி:
முத்துநகர் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம், தூத்துக்குடி அழகப்பா கல்வி மையத்தின் மாடியில் இன்று சிறப்பாக நடைபெற்றது.


இந்தக் கூட்டத்தில் சங்க நிர்வாகத்தில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள், புதிய செயற்பாடுகள் மற்றும் கலைஞர்களின் நலனுக்கான நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தருணப் புகைப்படம்
முத்துநகர் திரைப்பட கலைஞர்கள் சங்க கூட்டம்


இக்கூட்டத்திற்கு சங்கத் தலைவர் முருகேசன் தலைமையளிக்க, பொருளாளர் ஜாகிர் உசேன் நிதி நிலவரங்களை பகிர்ந்தார். மேலும் கௌரவ ஆலோசகர்கள் புலவர் சு.முத்துசாமி, து.பத்மநாதன், துணைத் தலைவர் ப.சக்திவேல், துணைச் செயலாளர்கள் மாரிமுத்து, டேனியல், செயற்குழு உறுப்பினர்கள் சீலன், மஜித், செய்யது அபுதாஹிர், டாக்டர் VPM, மைக்கேல் ஜெரோம், நல்ல சிவம், முனீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு, தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக