சனி, 14 டிசம்பர், 2024

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழைநீர் வெளியேற்றும் பணிகள் தீவிரம்

Tamil Nadu updates

photo news by sunmugasuthram Reporter 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழைநீர் வெளியேற்றும் பணிகள் தீவிரம் – நிா்வாக இயக்குநர் சிவராசு



தூத்துக்குடி: டிசம்பர்15 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் கனமழை காரணமாக மழைநீர் வெளியேற்றும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. 


தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழைநீர் வெளியேற்றும் பணிகள் தீவிரம் நகராட்சி நிர்வாக இயக்குநர் எஸ். சிவராசு தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் மழைநீர் பிரச்சினைகள் மற்றும் தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.


கூட்டத்தில் அவர் கூறியதாவது:

கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய மாநகராட்சி தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 


60 வார்டுகளிலும் சிறிய மோட்டார்கள் மாற்றி பெரிய மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


 அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் தங்களுடைய பகுதிகளில் தேவைப்படும் உதவிகளை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள், உணவு மற்றும் அடிப்படை வசதிகள் முழுமையாக வழங்கப்படும்.


16, 17, 18 வார்டுகளில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால் ஏற்பட்ட பாதிப்புகள் விரைவில் சரிசெய்யப்படும். பக்கிள் ஓடையில் நீர்வரத்து குறைவடைந்ததால் அப்பகுதிகளில் கழிவுநீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


பின்னர், மாநகராட்சிப் பகுதிகளை நேரில் ஆய்வு செய்த அவர், அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.


அந்த சந்திப்பில் கலெக்டர் இளம்பகவத், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கோட்டாட்சியர் பிரபு மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக