வியாழன், 28 நவம்பர், 2024

தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம்


தூத்துக்குடி மாநகராட்சியில் இம்மாத மாமன்ற சாதாரண கூட்டம்  நடைபெற்றது



இது பற்றிய செய்தியாவது


தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று 29 11 2024 காலை 11:30 மணி அளவில் மாமன்ற வளாகத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் துணை மேயர் ஜெனிதா செல்வராஜ் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் முன்னிலையில் நடைபெற்றது


இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி வார்டு 60 வார்டு கவுன்சிலர்கள் கலந்து  கொண்டனர்




மாமன்ற கூட்டத்தில் தூத்துக்குடி மாநகரப் பகுதியில் கனமழை குறித்து வார்டு பகுதியில் தேங்கும் மழைநீர் அப்புறப் படுத்துவதை உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறித்து மேயர் ஜெகன்  பெரியசாமி கவுன்சிலரிடம் பேசினார்.


தூத்துக்குடி மாநகராட்சி வழக்கறிஞர் சாமுவேல் ராஜேந்திரன் மறைவுக்கு மாமன்ற  கூட்டம் ஆரம்பமானதும் ஒரு நிமிடம் அனைவரும் எழுந்து அஞ்சலி செலுத்தினர் 


பின்னர் மாநகராட்சியில் சார்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக