வெள்ளி, 21 ஜூன், 2024

கருணை இருந்தால் முதல்வர் ஸ்டாலின் கருணாபுரம் செல்ல வேண்டும்!

▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 22-6-2024

கருணை இருந்தால் முதல்வர் ஸ்டாலின் கருணாபுரம் செல்ல வேண்டும்!

பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என். எஸ்.  பிரசாத் அறிக்கை





மக்களை காக்க வேண்டிய ஆட்சி மன்றமே செயலிழந்து நிற்கும் பொழுது சட்டமன்ற நிகழ்ச்சிகளை, கூட்டத் தொடரை தற்காலிகமாக ரத்து செய்துவிட்டு ...


அதிகாரத்திற்காக, சுயநலத்திற்காக கள்ளக்குறிச்சி மக்களுக்கு ஏற்பட்ட அநியாயத்திற்கும் அக்கிரமத்திற்கும், உயிர் பலிக்கும் குரல் கொடுக்காத, மக்கள் விரோதிகளாக செயல்படும் திமுகவின் கூட்டணி கட்சி சட்டமன்ற 

உறுப்பினர்களை தவிர்த்து விட்டு.... 


தன்னுடைய அமைச்சவை சகாக்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த திமுக எம்எல்ஏக்கள் அனைவருடன் முதல்வர் ஸ்டாலின்  கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக சந்திக்க வேண்டும்


தங்களுடைய அமைச்சரவை சகாக்கள் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களிடம்.... 55க்கும் மேற்பட்ட கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்பத்தினரின் கண்ணீரை அவர்கள் கஷ்டத்தை நீங்கள் நேரடியாக அவர்களுக்கு சுட்டிக்காட்டி ..


இனி தமிழகத்தில் எந்த ஒரு சட்டமன்ற தொகுதியிலும் கள்ளச்சாராயம் காய்ச்ச அனுமதிக்க கூடாது கள்ளச்சாராயம் சாவு இனி என்ற பேச்சுக்கே நீ தமிழகத்தில் இடம் இருக்கக் கூடாது. 


ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் மக்கள் உங்களை தங்களுடைய காவலனாக தேர்ந்தெடுத்துள்ளார்கள். அதனால் அரசு அதிகாரிகளுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் உள்ள பொறுப்பை விட கடமையை விட தொகுதியின் மக்கள் பிரதிநிதிகளாக விளங்கும் சட்டமன்ற உறுப்பினர்களாகிய உங்களுக்கு மக்கள் நலனில் அதிக அக்கறை இருக்க வேண்டும். நீங்கள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் முழுவதுமாக ஆய்வு செய்து கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் மீதும் போதை மாத்திரைகள், கஞ்சா பொட்டலம் விற்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கும் தமிழக அரசுக்கும் பரிந்துரைக்க வேண்டும் என்று அறிவுரை கூற வேண்டும்


சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் உடனடியாக 

திமுகவிலிருந்து நீக்கப்பட வேண்டும். இரண்டரை ஆண்டுகளாக கள்ளச்சாராயத்தில் அவர்களின் பங்கு குறித்து முழுமையாக விசாரித்து, கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு ஆதரவாகவும் கள்ளச்சாராயத்தை காய்ச்சியவர்களை ஊக்குவிப்பவர்களாகவும் அதனால் பயன் அடைந்தவர்களாகவும் கூறப்படும் அவர்களுடைய சொத்துக்களை தமிழக அரசு பறிமுதல் செய்ய வேண்டும்.



"தமிழகத்தின் கள்ளச்சாராயம் மற்றும் போலி மது ஆலைகளின் சந்தையாக திராவிட மாடல் ஆட்சியில் சீர் கெட்டுப் போன விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் இனி தமிழகத்தின் சிறந்த மாவட்டங்களாக வளர்ச்சி 

அடைய பாடுபடுவேன்.


மற்ற மலை சுற்றுலா தலங்களுக்கு இணையாக இனி தமிழகத்தின் மிகச்சிறந்த மூலிகை சுற்றுலா தளமாக கல்வராயன் மலை உருவாக்கப்படும்.


மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட கிராமங்களில் வாழும்  அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பாடுபடுவோம். 

அந்த மாவட்டங்களில் உள்ள மலைவாழ் கிராமங்கள் மற்றும் அனைத்து கிராமங்களிலும் தொலைநோக்கு சிந்தனையுடன் கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழித்து, அந்த ஏழை மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை மறுமலர்ச்சி உருவாக்கக்கூடிய செயல்திட்டங்களை செயல்படுத்தியே தீருவேன்.


இனி தமிழகத்தில் எந்த குடும்பத்திலும் எதிர்காலத்தில்  கள்ளச்சாராய சாவுகள் நடக்காது காவல்துறையில் அரசு இயந்திரங்களில் நிர்வாக சீர்கேட்டிற்கு இடம் தர மாட்டேன்"  என்றெல்லாம் சட்டசபையில் துணிந்து சத்தியம் செய்ய வேண்டிய முதல்வர் ஸ்டாலின் வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு தப்பிக்க முயல்வது ஏன்? 


நான் எந்த பிரச்சினையில் இருந்தும்

ஓடி ஓடி ஒளிபவன் அல்ல. 

உள்துறையை கவனிப்பவன் என்ற முறையில் முதலமைச்சர் என்ற முறையில் பொறுப்புடன் பதில் கூறி வருகிறேன் என்று சட்டசபையில் வியாக்கியானம் பேசும் முதல்வர் இன்னும் நேரடியாக கள்ளச்சாராய பாதிப்புகளில் உயிரிழந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திக்காமல்  பாசாங்கு செய்வது நியாயமா?


கள்ளச்சாராயத்தால் இந்தியாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் உன் எப்பொழுதும் நடந்திராத வகையில் ஒரு மிகப்பெரிய கோர உயிர்பலி தமிழகத்தில் நடந்திருக்கிறது என்பதை இன்னமும் உணர்ந்து கொள்ளாமல் தமிழக முதல்வர் பேசுவது, நடந்து கொள்வது, இதற்கு உயிர் முன்பு நடந்த கள்ளச்சாராய சாவுகளையும் விசாரணைகளையும் ஒப்பிட்டு பேசுவது  வருத்தம் அளிக்கிறது.



கள்ளக்குறிச்சி சம்பவத்தில் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என்று முதல்வர் நீலிக்கண்ணீர் விடுகிறார். கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் நிவாரணங்கள் வழங்கப்படும் என்று சொல்லி , அந்த மக்களுக்கான நிரந்தர தீர்வுகள் குறித்து பேசாமல் ஆசை வார்த்தைகளை கூறி பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க பார்ப்பது நியாயமா?


புதுச்சேரியில் இருந்து மெத்தனால் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டுள்ளது. அவர்களை விரைவில் கைது செய்வோம். விழுப்புரம் திருச்சி சேலம் செங்கல்பட்டில் இருந்து   37 மருத்துவர்கள் செவிலியர்கள் கள்ளக்குறிச்சியில் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். உயிர் காக்க மருந்துகள் நிலுவையில் உள்ளது. 


தேவைப்பட்டால் வெளிமார்க்கெட்டில் இருந்து மருந்துகள் கொள்முதல் செய்து சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும்" என்று என்று நடந்து முடிந்த படுகோரமான உயிர் உயிர் பலிகளின் கொடுமை புரியாமல் சட்டசபையில் பெரும் சாதனை செய்தது போல் பதில் அளிப்பது நியாயமா?


கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக இரண்டு நாளில் அறிக்கை கேட்டுள்ளேன்.

சிபிசிஐடி விசாரணை வேகமாக நடந்து வருகிறது. குற்றவாளிகள் தப்ப முடியாது என சட்டசபையில் தன்நிலை விளக்கம் தருகிறார் முதல்வர் ஸ்டாலின்.


நடந்து முடிந்த கோர சம்பவங்களுக்கு தார்மீக பொறுப்பேற்று, மனிதாபிமான முறையில் அனைத்திற்கும் தீர்வு கண்டு, அதே நேரத்தில் முதல்வர்  பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கும் பொழுது தன்னுடைய பேச்சாலும் செயலாலும் எதிர்காலத்தில் எந்த  குடும்பத்திலும் கள்ளச்சாராயத்தால் குடும்பத் தலைவர் இறந்து போகாமல் நான் பார்த்துக் கொள்வேன்...


 ஒவ்வொரு வீட்டிலும் இளைஞர்கள் வாழ்வு சீர்கேடாமல் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வேன்" என்ற முதல்வரின் உத்தரவாதம் தான் தற்போது கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அருமருந்து.


ஒரு சிலர் இதை சாதாரண குடிகாரர்களின் பிரச்சினையாக கருதுகின்றனர்.


 உழைக்கும் ஏழைத் தொழிலாளர்களின் வாழ்வியல் பிரச்சனை, உரிமை பிரச்சினை என்பதை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும். அந்த ஏழை மது பிரியர்களின் உணர்வுகளுக்கும் தமிழக அரசு டாஸ்மாக் நிர்வாகம் செவி சாய்க்க வேண்டும். 


அதே நேரத்தில் தமிழகத்தில் பெரு நகரங்களில் படிப்படியாக டாஸ்மார்க் மதுக்கடைகளை குறைப்பதற்கான முயற்சி எடுக்க வேண்டும்.


மேலும் இந்த சூழ்நிலையில் கள்ளச்சாராய த்தை தடுப்பதற்கு உறுதியாக நடவடிக்கை எடுக்க தவறினால் எதிர்காலத்தில் எல்லா மாவட்டங்களிலும் கள்ளச்சாராயம், போதை மாத்திரை, கஞ்சா பொட்டலங்களின் சங்கமமாக மாறி கொரோனா வேகத்தில் பல ஆயிரம் உயிர்களை இழக்க கூடிய சூழ்நிலை உருவாகும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.


சட்டமன்றம் கூடும் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் ஆணையம் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதியை அறிவித்ததால்... சட்டமன்ற கூட்டத்தை முன்கூட்டியே நடத்துகிறது திராவிட மாடல் அரசு.


விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு கொடுக்கிற மரியாதையை...

கள்ளத்தனமாய் விற்கிற கள்ளச்சாராயத்தை அருந்தி உயிரிழந்த அப்பாவி உயிர்களுக்கு அளிக்க கூடாதா!


சட்டமன்றத்தை ஒத்தி வையுங்கள் முதல்வரே...

கருணை இருந்தால் கருணாபுரம் சென்று மக்கள் மன்றத்தில் அந்த அபலைகளை சந்தியுங்கள் முதல்வரே!


ஏ.என்.எஸ் பிரசாத்

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக